Take a fresh look at your lifestyle.

இந்திய ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்திய மூன்றாவது நடுவர்! விக்கெட்-சிக்ஸில் நடந்த சர்ச்சை: வைரலாகும் வீடியோ

41

இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய ரசிகர்களை மூன்றாவது நடுவர் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டி20 போட்டி அகமதாபாத்தில் இருக்கும் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் இந்திய அணியினர் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியினை வெற்றி கொண்டுள்ளனர்.

 

முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 185 ஓட்டங்கள் எடுத்தது. இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து 57 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினார்.

ஆனால், சூர்யகுமார் தூக்கி அடித்த பந்தை மலான் அபாராமாக ஓடி வந்து பிடித்தார். ஆனால் பந்தானது தரையில் பட்டிருந்தது. இதனால் நடுவர் மூன்றாவது நடுவருக்கு சென்றார், இருப்பினும் ஷாப் சிக்னல் கள நடுவர் அவுட் என்று கொடுத்தார்.

 

மூன்றாவது நடுவர் அந்த கேட்ச்சை பல்வேறு கோணங்களில் பார்த்தார், ஆனால் அவருக்கு தெளிவான கோணம் கிடைக்காத காரணத்தினால், கள நடுவர் கொடுத்த சாப்ட் சிக்னல் அவுட் என கொடுத்தார்.

ஆனால் பந்தானது மைதானத்தில் பட்டது அப்படியே தெரிந்தும், மூன்றாவது நடுவர் எப்படி அவுட் கொடுத்தார் என்று இந்திய ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

 

இது மட்டுமின்றி வாஷிங்ட சுந்தர் அடித்த பந்தை, பவுண்டரில் லையனில் நின்ற ரஷித் அற்புதமாக பிடித்தார். இருப்பினும் அவர் காலை பவுண்டரி லைனை ரஷித் மிதித்திருக்கலாம் என்று மூன்றாவது நடுவரிடம் சென்றது.

அதே போன்று ரசித் பந்தை பிடித்த போது, பவுண்டரில் லயனில் காலை மிதித்தது தெளிவாக தெரிந்தது. ஆனால் மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்துவிட்டார்.

இதை எல்லாம் கண்ட இந்திய ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.