Take a fresh look at your lifestyle.

காஷ்மீரில் இந்த ஆண்டு இதுவரை 200-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் – டிஜிபி தகவல்

33

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகரில் உள்ள ரங்ரீத் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை இன்று மாலை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்த தேடுதல் வேட்டையின் போது பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைமை தளபதி ஷைப்புல்லா கொல்லப்பட்டான். ஹிஸ்புல் முஜாகிதீன் முன்னாள் தளபதியான ரியாஸ் நைகோ கடந்த மே மாதம் என்கவுண்டரில் கொல்லப்பட்ட பின்னர் அந்த அமைப்பின் தலைமை தளபதி பொறுப்பெற்றுக்கொண்ட ஷைப்புல்லா பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான்.

இந்நிலையில், என்கவுண்டரில் ஷைப்புல்லா கொல்லப்பட்டது தொடர்பாக காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங் செய்தியாளர்கள் சந்தித்தார். இது தொடர்பாக டிஜிபி தில்பக் சிங் கூறியதாவது:-

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் முதன்மை தளபதி ஷைப்புல்லா இன்று நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளான். ஷைப்புல்லா 2014-ம் ஆண்டு முதல் பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளான். இவன் புர்ஹான் வானியுடன் நீண்டகாலமாக தொடர்பில் இருந்துள்ளான். ஷைப்புல்லா கொல்லப்பட்டதையடுத்து காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைமை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு இதுவரை 200-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.என்றார்.