நாட்டின் முதல் கடல் விமான சேவை இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. குஜராத்தில் ஒற்றுமை சிலை அமைந்துள்ள கெவாடியாவில் இருந்து சபர்மதி நதிக்கரை வரையிலான கடல் விமான சேவையை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். அத்துடன் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்தார்
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த கடல் விமானம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த விமானம் நீரில் இருந்து புறப்பட்டு நீரில் இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.