Take a fresh look at your lifestyle.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் மேலும் 1.34 லட்சம் பேர் பாதிப்பு, 2,887 பேர் உயிரிழப்பு

42

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 2,887 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்தியா முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சையில் உள்ளவர்கள் மற்றும் இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கையினை வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

* புதிதாக 1,34,154 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* இதன் மூலம், இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,84,41,986 ஆக உயர்ந்தது.
* புதிதாக 2,887 பேர் உயிரிழந்துள்ளனர்.
* இதன் மூலம், இந்தியாவில் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,37,989 ஆக உயர்ந்துள்ளது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,11,499 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதன் மூலம், இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,63,90,584 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 17,13,413 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* இதன் மூலம், இந்தியாவில் இதுவரை 22,10,43,693 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.