Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசிபலன் 21.09.2021

1

மேஷம்

மேஷம்: சின்ன சின்ன வேலைகளை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். இனிமையான நாள்.

மிதுனம்

மிதுனம்: பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். அந்தஸ்து உயரும் நாள்.

கடகம்

கடகம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கி மகிழ்ச்சி பொங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சிறுவார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.

கன்னி

கன்னி: சவாலாக தெரிந்த சில வேலைகள் சாதாரணமாக முடியும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் ஆதியாக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: பிள்ளைகளின் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

தனுசு

தனுசு: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகளுக்கு நல்லவரன் அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகளை தாண்டி வெல்லும் நாள்.

மகரம்

மகரம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.

கும்பம்

கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்னைகள் நீங்கி அமைதியான சூழல் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களால் மதிப்பு உயரும். வியாபாரத்தில் லாபம் தேடி வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் கிடைக்கும். நல்லன நடக்கும் நாள்.

மீனம்

மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உறவினர்கள் நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் சச்சரவு வரும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். கவனம் தேவைப்படும் நாள்.