Take a fresh look at your lifestyle.

6 ஓட்டங்களில் தனது இரண்டாவது வெற்றியினை ருசித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி

33

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டில் இன்று சென்னையில் நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும்- டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.

குறித்த போட்டியில் 6 ஓட்டங்களினால் தனது இரண்டாவது வெற்றியினை  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பெற்றுக்கொண்டது.

முதலில் நாணயசூழற்சியில் வென்ற டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை பறிக்கொடுத்து 149 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் கிலென் மெக்ஸ்வல் 59 ஓட்டங்களும் அணித்தலைவர் விராட் கோலி 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி சார்பாக பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுக்களை பெற்றுக்கொடுத்தார்.

150 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 விக்கெட்டினை பறிக்கொடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்  143 ஓட்டங்களை பெற்றது.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் டேவிட் வார்னர் 54 ஓட்டங்களும் மனிஷ் பாண்டே 38 ஓட்டங்களும் பெற்றனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பாக பந்து வீச்சில் ஷாபாஸ் அஹமட் 3 விக்கெட்டுக்களை பெற்றுக்கொடுத்தார்.