Take a fresh look at your lifestyle.

துளசி துவையல் அதிக நன்மைகள் நிறைந்தது

32

தேவையான பொருட்கள்

துளசி – 1 கப்

புதினா – ½ கப்
புளி – எலுமிச்சை அளவு
பச்சைமிளகாய் – 2
காய்ந்த மிளகாய் – 2
மிளகு – சிறிதளவு
உளுத்தம்பருப்பு – ½ ஸ்பூன்
பூண்டு – 5 பல்
பாதம் பருப்பு – 5
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் துளசியையும் புதினாவையும் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் உளுத்தம்பருப்பு ,பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின்னர் பூண்டு, மிளகு, புளி,பாதாம் சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள புதினாவை சேர்த்து வதக்கவும்.

பின்னர் அடுப்பை அனைத்து வதக்கிய பொருட்கள் சிறிது ஆறியவுடன் அதில் துளசியை சேர்த்து வதக்கவும்.

பின் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்தால் ஆரோக்கியம் தரும் துளசி துவையல் ரெடி.