Take a fresh look at your lifestyle.

சூப்பரான வால்நட் பிரவுனியை வீட்டிலேயே செய்யலாம் வாங்க…

132

தேவையான பொருட்கள்

பால் – 500 மிலி

மைதா மாவு – 750 கிராம்
பேக்கிங் பவுடர் – 10 கிராம்
பேக்கிங் சோடா – 10 கிராம்
வால்நட் – 220 கிராம்
டார்க் சாக்லேட் – 360 கிராம்
வெண்ணெய் – 360 கிராம்
சர்க்கரை – 260 கிராம்

பிரவுன் சுகர் – 260 கிராம்
செய்முறை

வெண்ணெய், சர்க்கரை மற்றும் பால் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கிரீம் பதத்தில் நன்றாக கலந்து கொள்ளவும்.

சாக்லேட்டை உருக்கி, அதை இந்தக் கலவையில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

மாவு, வால்நட், பேக்கிங் சோடா ஆகியவற்றை இதில் கலந்து, நன்றாக பிசையும்.

இந்தக் கலவையை, பேக்கிங் டிரேவில் வைத்து, 35 நிமிடங்களுக்கு 175 டிகிரி செல்சியசில் சமைக்கவும்.

விருப்பமான வடிவங்களில், வால்நட் பிரவுனியை வெட்டி, வெனிலா ஐஸ்கிரீமுடன் பரிமாறவும்.

சூப்பரான வால்நட் பிரவுனி ரெடி.