கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் அஜித் ரசிகர்கள் கொரோனாவை வைத்து அவரது நண்பர்கள் கல்யாண வாழ்த்து பேனர் ஒன்றை வைத்திருக்கிறார்கள்.
வாழ்த்து பகுதியில், ‘நண்பா நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல மனைவியுடன்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நண்பர்களின் பெயர்களுக்கு முன்பு சானிடைசர், விலகி இரு, இருமல், தும்மல், காய்ச்சல், மூச்சுத்திணறல், விழித்திரு, பாசிடிவ், முகக்கவசம், கோவிட், சுடுநீர் என்று கொரோனாவுடன் தொடர்புடைய அடைமொழியோடு அவர்களது பெயர் அச்சிடப்பட்டுள்ளது. இந்த திருமண பேனர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.