Take a fresh look at your lifestyle.

மறைந்த நண்பனர் சேதுராமனுக்காக நடிகர் சந்தானம் செய்த செயல்

37

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் மாதத்தில் டாக்டர் சேதுராமன் மாரடைப்பால் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்போது அவரது மனைவி உமையாள் கர்ப்பம் தரித்திருந்தார். சேதுராமன் மறைவை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உமையாளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மரணமடைந்த சேதுராமனே மீண்டும் மகனாக வந்திருப்பதாக குடும்பத்தினர் தங்களை ஆறுதல்படுத்திக் கொண்டனர்.

இந்நிலையில் சேதுராமனின் பிறந்த தினத்தில் ஈசிஆரில் அமைந்துள்ள அவரது ‘ஜி கிளினிக்கை’சந்தானம் திறந்து வைத்துள்ளார். திறப்புவிழாவில், நடிகர்கள் வெங்கட் பிரபு, பாபி சிம்ஹா, பூர்ணிமா பாக்யராஜ், சதீஷ், ஆரவ், தர்ஷன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

2016-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ‘ஜி கிளினிக்’ அண்ணாநகர், போயஸ் கார்டன் ஆகிய இரண்டு இடங்களில் கிளைகளைக் கொண்டிருந்த நிலையில் தற்போது 3-வது ஈசிஆரிலும் திறக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை நாளை (அக்டோபர் 30) முதல் செயல்படத் தொடங்குகிறது.

நிகழ்ச்சியில் பேசிய உமா சேதுராமன், “ஈசிஆரி-ல் ஜி (ZI) கிளினிக்கின் கிளையைத் திறக்க வேண்டும் என்பது எனது கணவர் மருத்துவர் சேதுராமனின் கனவுத் திட்டம். அவருடைய பிறந்தநாளான இந்த நன்நாளில் அதை நனவாக்கியதில் மிகப்பெரிய மகிழ்ச்சி. நோயாளிகளை அணுகுவதிலும், அவர்களுக்கு சிகிச்சையளிப்பதிலும் மருத்துவர் சேதுராமன் கொண்டிருந்த தொலைநோக்குப் பார்வையையும் கனிவையும் சற்றும் குறையாமல் அளிக்கும்வகையில் இந்த புதிய கிளையும் செயல்படும்” என நெகிழ்ச்சி பொங்க நம்பிக்கை தெரிவித்தார்.