Take a fresh look at your lifestyle.

ராகவா லாரன்ஸ் பிறந்தநாளில் வெளியானது ‘ருத்ரன்’ படத்தின் டைட்டில் லுக்

43

தமிழ் சினிமாவில் நடனக் கலைஞராக அறிமுகமாகி பின்னர் இயக்குநர், நடிகர் என உயர்ந்தவர் ராகவா லாரன்ஸ். திரைத்துறையைத் தாண்டி இவர் செய்யும் சமூக சேவைகளுக்காகவே ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர்.

தமிழில் இவர் இயக்கி நடித்த காஞ்சனா திரைப்படங்கள் வசூலில் சாதனை படைத்து ஹிட் அடிக்கவே இந்தியில் அக்‌ஷய்குமாரை நாயகனாக வைத்து காஞ்சனா படத்தின் முதல்பாகத்தை ‘லட்சுமி பாம்’ என்ற பெயரில் இயக்கியுள்ளார்.

இத்திரைப்படம் நவம்பர் 9-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தப் படம் பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் அடுத்ததாக தான் நடிக்க இருக்கும் பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு ‘ருத்ரன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

‘ருத்ரன்’ திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இது ராகவா லாரன்ஸ் – ஜி.வி.பிரகாஷ் இணைந்து பணியாற்றும் முதல் படமாகும். இதனிடையே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார்.

ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ருத்ரன்’ பட டைட்டில் லுக் வெளியாகியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதைத்தொடர்ந்து திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் ராகவா லாரன்ஸுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.