Take a fresh look at your lifestyle.

இயக்குனர் ராமுடன் கூட்டணி அமைக்கும் ஆர்.ஜே.பாலாஜி?

26

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தில் காமெடி வேடத்தில் நடித்தவர் ஆர்.ஜே.பாலாஜி. அந்த படத்தில் இவருடைய காமெடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து எல்.கே.ஜி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி வெற்றி கண்ட ஆர்.ஜே. பாலாஜி, கடந்தாண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

ஆர்.ஜே.பாலாஜி
ஆர்.ஜே. பாலாஜி அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ் எம்.ஏ, தங்க மீன்கள், பேரன்பு போன்ற படங்களை இயக்கிய ராம், அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.