Take a fresh look at your lifestyle.

2020 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் சிறந்த வங்கியாக யூரோமணியால் மகுடம் சூட்டப்பட்டது கொமர்ஷல் வங்கி

38

உலகின் முன்னணி நிதியியல் சஞ்சிகைகளுள் ஒன்றான Euromoney (யூரோமணி), 2020ஆம் ஆண்டுக்கான இலங்கையின் சிறந்த வங்கியாக கொமர்ஷல் வங்கிக்கு மகுடம் சூட்டியள்ளது. அச்சஞ்சிகையின் அதிசிறப்புக்கான ஆசிய விருதுகளிலேயே இக்கௌரவத்தை கொமர்ஷல் வங்கி பெற்றுக்கொண்டது.

மதிப்புமிக்க இவ்விருதை யூரோமணியிடமிருந்து ஆறாவது தடவையாகவும் இதன் மூலமாகக் கொமர்ஷல் வங்கி பெற்றுக் கொண்டுள்ளது.

பங்குபற்றுநர்களால் மேற்கொள்ளப்படும் விரிவான சமர்ப்பணங்கள் பிராந்தியத்திலுள்ள வங்கியியல் தொடர்பாகவும் மூலதனச் சந்தைகள் தொடர்பாகவும் சஞ்சிகையின் ஆசிரியர்கள் ஊடகவியலாளர்கள் ஆராய்ச்சி அணி ஆகியோரால் ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி ஆகிய இரண்டினதும் அடிப்படையில் யூரோமணி விருதுகள் வழங்கப்படுகின்றன.

நிறுவனத்தின் அளவு (அளவு தொடர்பில் முக்கியமான கவனம் வழங்கப்படுவதில்லை என்ற போதிலும்) இலாபமீட்டும் தன்மை வளர்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய திறன் சக நிறுவனங்களைப் பெறுபேறுகளால் முந்தும் தன்மை மாற்றமடையும் சந்தை நிலைமைகளுக்கும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கும் ஏற்றவாறு மாறக்கூடிய தன்மை ஆகியன இவ்விருதுக்காகக் கருத்திலெடுக்கப்படும் ஏனைய பிரிவுகளாகும்.

கருத்திலெடுக்கப்பட்ட 12 மாதங்களில் வெளிப்படுத்திய பெறுபேறுகளை எடுத்துக்காட்டுமாறும் உத்தியியல் இலக்குகளை அடைவதற்கான அதன் திறன்கள் ஏற்கெனவே, அறிவிக்கப்பட்ட முன்னெடுப்புகளின் மைல்கல்களை அடைந்தமை தொடர்பான தகவல்கள் போன்றவற்றை வழங்குமாறு ஒவ்வொரு வங்கியிடமும் கோரப்பட்டது.

நிதியியல் பெறுபேறுகளுடன் டிஜிட்டல் வங்கியியல் உத்திகள் தொடர்பான விவரங்கள் இணையப் பாதுகாப்பு கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு போன்ற விடயங்கள் தொடர்பான அணுகுமுறைகள் போன்ற தகவல்களை உள்ளடக்குமாறு வங்கிகளிடம் வினவப்பட்டிருந்தது.

கொமர்ஷல் வங்கியானது 1.4 ட்ரில்லியன் ரூபாய் மொத்தச் சொத்துக்கள் மொத்த வருமானமாக 150 பில்லியன் ரூபாய் நிகர இலாபமாக 17.4 பில்லியன் ரூபாய் வைப்புப் பெறுமதியாக மொத்தமாக 1.07 ட்ரில்லியன் ரூபாய் நிகரக் கடன்களும் பெறுவதற்குரியனவுமென 930.7 பில்லியன் ரூபாய் ஆகிய தரவுகளுடன் 2019ஆம் ஆண்டை நிறைவுசெய்தமை அவ்வங்கியின் வெற்றிக்குப் பங்களித்திருந்தன.

அதிகபட்ச இலாபமீட்டும்தன்மை அதிகபட்ச கடன் தரப்படுத்தல் அதிகபட்ச வைப்புக்கள் மிகப்பெரிய கடன்வழங்கல் தளம் பங்குதாரர்களின் நிதிகளுக்கு அதிகபட்ச சராசரி ஈட்டம் ஆகியவற்றை இலங்கையின் தனியார் வங்கிகளோடு ஒப்பிடும்போது கொமர்ஷல் வங்கி கொண்டிருந்தது. மேலதிகமாக சொத்துக்களின் அடிப்படையில் இலங்கையின் மிகப்பெரிய தனியார் வங்கியாகவும் அதிகபட்ச சந்தை முதலாக்கத்துடன் கூடிய வங்கி நாட்டில் சிறந்த CASA தரப்படுத்தல் 2019ஆம் ஆண்டில் பட்டியற்படுத்தப்பட்ட மூன்றாவது மிகப்பெரிய நிறுவனம் ஆகிய பெருமைகளையும் கொமர்ஷல் வங்கி கொண்டுள்ளது.

உலகின் ஆயிரம் தலைசிறந்த வங்கிகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி தொடர்ந்து பத்து வருடங்களாக அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இவ்வாண்டு வங்கி அதன் 100 வது அண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. 2019 ல் 50 க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் விருதுகளை வென்றுள்ள கொமர்ஷல் வங்கி இலங்கையில் 268 கிளைகளுடனும் 873 ATM வலையமைப்புடனும் செயற்படுகின்றது.

கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டதாகவும் மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் நேய்பியுடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது.