Take a fresh look at your lifestyle.

TATA Steel உடனான தனது பங்காண்மையை லங்கா SSL வலிமைப்படுத்தியுள்ளது

70

உருக்குக் கம்பிகள் துறையில் ஒப்பற்ற நன்மதிப்பைப் பெற்றுள்ள E B Creasy குழுமத்தின் துணை நிறுவனமான லங்கா ஸ்பெஷல் ஸ்டீல் லிமிடெட் (லங்கா SSL), உலகின் மாபெரும் ஸ்டீல் கம்பி உற்பத்தியாளர்களில் ஒன்றும் இந்தியா மற்றும் தாய்லாந்தில் உற்பத்தி தொழிற்சாலையைக் கொண்டுள்ள TATA Steel லிமிடெட்டின் குளோபல் வயர் இந்தியா (GWI) உடனான தனது நீண்ட கால பங்காண்மையை மேலும் வலிமைப்படுத்தியுள்ளது.

உயர் தரமான உருக்குக் கம்பி தயாரிப்புகளுக்கு இலங்கையில் ஏக விநியோகத்தராகவும் முகவராகவும் லங்கா SSL திகழும் என்பதுடன் ஏற்கனவே காணப்படும் தனது பொருள் தெரிவுகளை மேலும் விஸ்தரிப்பதாக அறிவித்துள்ளது. தற்போது உள்வாங்கப்பட்டுள்ள தயாரிப்புகளில் கொங்கிறீற் கம்பங்களிலும் pre-stressed concrete pipes களிலும் பயன்படுத்தப்படும் High Tensile wire (HTS), வௌவேறு வகையான கட்டமைப்புகளை நிர்மாணிப்பதற்கான Pre-stressing கொங்கிறீற்றில் பயன்படுத்தப்படும் Prestress Concrete Strand wire, மெத்தைகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உதிரிப்பாகங்களில் பயன்படுத்தப்படும் Spring wire, வாகனத் தயாரிப்புகளில் டயர்களுக்கான Bead wire, ரோலர் கதவுகளுக்கான Shutter wire, Gabions மற்றும் உயர் பெறுமதியான தயாரிப்புகளுக்கான Heavy GI போன்ற பல தெரிவுகள் அடங்கியுள்ளன.

நிர்மாணம் வாகனங்கள் மற்றும் பொது பொறியியலுக்கு வலுச் சேர்த்தல் மற்றும் விற்பனை ஆகிய பல்வேறு பிரிவுகளில் நிறுவனத்தின் உருக்குக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. உலகளாவிய ரீதியில் காணப்படும் பல முக்கியத்துவம் வாய்ந்த நிர்மாணங்களுக்கு உருக்குக் கம்பிகளை விநியோகித்துள்ள பெருமையைக் கொண்டுள்ளது. உலகில் பரந்தளவு உருக்குக் கம்பி உற்பத்தியாளர்களில் ஒன்றாகத் திகழும் Tata Steel இன் ஒரு பிரிவாக GWI திகழ்கின்றது.

இந்த மூலோபாய நகர்வுடன் லங்கா SSL, முற்கூட்டி ஓடர் செய்து கொள்வதற்கு பதிலாக தேவையான உருக்குக் கம்பிகளை இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும். சந்தையில் இந்த உருக்குக் கம்பிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு லங்கா SSL சகல முயற்சிகளையும் மேற்கொள்ளும் நிலையில் வாடிக்கையாளர்களுக்கு தற்போது இந்த உயர் தரம் வாய்ந்த தயாரிப்புகளை பெற்றுக் கொள்ள முடியும்.

TATA Steel லிமிடெட் குளோபல் வயர் இந்தியா (GWI) பிரதம சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை அதிகாரி அனுரக் பாண்டே கருத்துத் தெரிவிக்கையில் ´நன்மதிப்புடன் புகழ்பெற்ற நிறுவனமான LSSL ஐ இலங்கையில் எமது ஏக விநியோகத்தராக நியமித்துள்ளோம் என்பதை மிக மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். Tata Steel உறுதியான நீண்ட கால பிரசன்னத்தை விற்பனை மற்றும் தொழிற்துறையில் கொண்டுள்ளதுடன் இதன் பிரகாரம் Global Wires இந்தியா பிரிவு சர்வதேச சந்தைகளில் விஸ்தரிக்க தற்போது எதிர்பார்க்கின்றது.´ என்றார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், ´இலங்கையில் எமது ஏக விநியோகத்தராக LSSL ஐ நியமித்துள்ள நிலையில் இரு நிறுவனங்களுக்குமிடையிலான இரு தசாப்த கால பரஸ்பர நம்பிக்கை மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாபார அபிவிருத்திக்கு புதிய வழிகள் திறக்கப்பட்டுள்ளதுடன் எமது சந்தைப் பிரசன்னத்தை அதிகரித்துக் கொள்ளவும் சந்தையில் வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் எமது சேவைகளை மேம்படுத்தவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உயர் தரமான தயாரிப்புகளை பெற்றுக் கொடுப்பது என்பதன் பிரகாரம் வாடிக்கையாளர்களுக்கான எமது அர்ப்பணிப்பு தங்கியுள்ளது.

LSSL உடனான இந்த மூலோபாய கைகோர்ப்பினூடாக எமது சேவை வழங்கல்களை மேலும் உறுதி செய்யக்கூடிதயாகவுள்ளது. இந்த நியமனத்துக்காக LSSL க்கு வாழ்த்துகளைக் தெரிவித்துக் கொள்வதுடன் வியாபார உறவை தொடர்ச்சியாக மேம்படுத்த எதிர்பார்க்கின்றோம்.´ என்றார்.

லங்கா ஸ்பெஷல் ஸ்டீல் லமிடெட் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரவீன் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில் ´உருக்கு இரும்புக் கம்பிகள் உற்பத்தியில் உலகளாவிய ரீதியில் முன்னோடியாகத் திகழும் நிறுவனத்துடன் எமது பங்காண்மையை மேலும் உறுதி செய்துள்ளதையிட்டு நாம் மிக மகிழ்ச்சியடைகின்றோம். உள்நாட்டு முகவராக நாம் கடந்த காலங்களில் இயங்கி சில தயாரிப்புகளை விநியோகித்த போதிலும் தற்போது இலங்கையில் ஏக விநியோகத்தராக சகல உருக்கு இரும்பு தயாரிப்புகளையும் விநியோகிப்பதற்காக விஸ்தரித்துள்ளோம். எமது வாடிக்கையாளர்களுக்கு இது பல்வேறு வழிகளில் அனுகூலமளிப்பதாக அமைந்திருக்கும் என்பதுடன் இலங்கையில் மூலப்பொருள் உடனடியாக கிடைப்பதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு செலவுச் சிக்கனத்தை ஏற்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.´ என்றார்.

´எதிர்காலத்தில் ஒப்பற்ற வாடிக்கையாளர் சேவையினூடாக இரு நிறுவனங்களினதும் சந்தைப் பங்கை விரிவடைவதற்காக எமது மூலோபாயத்தை தூரநோக்குடைய திட்டத்துடன் வலிமைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். தனது நன்மதிப்யை மேலும் கட்டியெழுப்ப லங்கா SSL எதிர்பார்ப்பதுடன் இதை தொடர்ந்தும் நிறுவனத்தின் சேவைகளையும் பொருட்களையும் நாடும் வாடிக்கையாளர்களினாலும் உயர் வினைத்திறன் வாய்ந்த அனுபவம் மிக்க ஊழியர்களினாலும் பிரதிபலிக்கப்படும்.´ என மேலும் குறிப்பிட்டார்.

கடந்த பதினாறு வருட காலமாக லங்கா SSL சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் உயர் தயாரிப்புகளை இலங்கையின் நிர்மாணத் துறைக்கு வழங்கி வருகின்றது. இதன் காரணமாக துறையின் முன்னோடி எனும் நிலையை எய்தியுள்ளது. தனது வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை LSSL கட்டியெழுப்பியுள்ளதுடன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக உயர் தகைமை வாய்ந்த செயலணியைத் தன்வசம் கொண்டுள்ளது. இந்த அணியினால் பிரத்தியேகமான மற்றும் தனிநபர்களுக்கான நெறிப்படுத்தப்பட்ட சேவைகள் வழங்கப்படுவதுடன் சகல வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளையும் தேவைகளையும் தொடர்ச்சியாக நிவர்த்தி செய்ய முன்வந்துள்ளது. லங்கா SSL என்பது ISO 9001: 2015 மற்றும் SLS 139: 2003 சான்றுகளைப் பெற்ற நிறுவனமாகும்.