Take a fresh look at your lifestyle.

IFC மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் இணைந்து இலங்கையில் 12,000 பெண்களுக்கு தொழில்களை உருவாக்கவும்

23

SheWorks Sri Lanka என அழைக்கப்படும் இரண்டு ஆண்டுகள் பங்காண்மையினூடாக, நாட்டின் 15 முன்னணி நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் எண்ணிக்கையில் 12 சதவீத அதிகரிப்பை ஏற்படுத்தி, அதனூடாக மொத்த பணியாளர்களில் 12,000 அதிகமானவர்கள் பெண்களாக திகழச் செய்ய முடிந்துள்ளது.

உலக வங்கி குழுமத்தின் அங்கத்துவ அமைப்பான IFC, அவுஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் Women in Work இனால் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட SheWorks Sri Lanka இனால் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இலங்கையில் சமத்துவமான மற்றும் மதிப்பான பணியிடங்களை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், வியாபார உற்பத்தித்திறன் மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பது இலக்காகக் கொள்ளப்பட்டிருந்தது.

2018 மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தினூடாக, SheWorks நிறுவனங்களில் பெண்களின் வியாபார தலைமைத்துவம், பெண் ஊழியர்களை பணிக்கு சேர்ப்பது மற்றும் தக்க வைத்துக் கொள்வது, தொழில் வழங்குநரின் உதவியுடனான பிள்ளை பராமரிப்பு வசதிகளை இனங்காணல், பாலியல் துன்புறுத்தல்கள் தவிர்ப்பு பொறிமுறைகளை ஊக்குவித்தல் மற்றும் விநியோகத் தொடரிலுள்ள பெண்களுக்கு உதவிகளை வழங்கல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்திய 97 பாலின-மதிநுட்ப செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இந்தப் பங்காண்மையினூடாக, SheWorks நிறுவனங்களில் பணியாற்றும் பெண் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டிருந்ததுடன், தலைமைத்துவ செயற்பாடுகளில் பெண்களின் ஈடுபாடு 21 சதவீத அதிகரிப்பையும் பதிவு செய்திருந்தது. ஆறு நிறுவனங்களில் நடுத்தர நிர்வாக நிலைகளில் பெண்களின் பங்களிப்பில் 8 முதல் 60 சதவீத அதிகரிப்பை அவதானிக்க முடிந்தது.

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான IFC முகாமையாளர் அமீனா ஆரிஃவ் கருத்துத் தெரிவிக்கையில், “உண்மையில் உள்ளடக்கமான வளர்ச்சிக்கு, பணிகுழாமிலுள்ள பெண்களுக்கான வாய்ப்புகள் வலிமைப்படுத்தப்படுவது கட்டாயமானது என்பதுடன், பணியிட சமத்துவத்தை மேம்படுத்துவதனூடாக வியாபாரத் திறன் வளர்ச்சியை முன்னேற்ற முடியும் என்பதை SheWorks நிறுவனங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இலங்கையின் ஏனைய நிறுவனங்களும் பாலின சமத்துவ நிகழ்ச்சி நிரலை தமது நிறுவனங்களில் பின்பற்றுவதை நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

இலங்கையின் மொத்த தொழிலாளர் செயலணியில் பெண்களின் பங்களிப்பு 34 சதவீதமாக அமைந்துள்ளது. மேலும், 20-40 வயதுக்குட்பட்ட பெண்கள் அதிகளவு வாய்ப்புகள் குறைந்தவர்களாக காணப்படுகின்றனர். தனியார் துறையில் 30 சதவீதமான தொழில்களில் மாத்திரமே இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனூடாக திருமணம் மற்றும் குழந்தை பராமரிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய பொறுப்புகளுக்கும் இதர சமூக வழமைகளுக்கும் பெண்களுக்கு காணப்படும் முக்கியத்துவம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பின்புலத்தில், ஆண்களுக்கும், பெண்களுக்கும் பணிச்சூழலில் தொடர்ந்தும் பணியாற்றக்கூடிய ஒரு சூழலை நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டியது முக்கியமானதாகும்.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹோலி கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் பணியாற்றுவோர் மத்தியில் SheWorks ஊடாக குறிப்பிடத்தக்களவு பாலினத்தவர் முன்னேற்றங்களை ஏற்படுத்தி, நிறுவனங்களின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. நிறுவன கூட்டாண்மை தலைமைத்துவம் அடங்கலாக பாரம்பரியமற்ற நிலைகளிலும், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகளிலும் பெண்களுக்கு பணியாற்றுவதற்கு அதிகளவான வாய்ப்புகளை பல நிறுவனங்கள் வழங்குகின்றன. நாட்டில் பாலின சமத்துவத்தை ஊக்குவித்து, ஏனைய நிறுவனங்களையும் இதே வழிமுறையை பின்பற்றச் செய்வதற்காக இந்த நிறுவனங்கள் சிறந்த முன்னுதாரணங்களாக அமைந்துள்ளன.” என்றார்.

SheWorks Sri Lanka வில் ஆடை உற்பத்தித்துறை, சுற்றுலாத் துறை, தகவல் தொழில்நுட்பம், வங்கி மற்றும் நிதியியல் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட துறை போன்ற துறைகளின் 15 நிறுவனங்களில் 170,000 ஊழியர்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பணியாற்றுபவர்கள் அங்கம் வகிக்கின்றனர். இதில், AIA இன்சூரன்ஸ் லங்கா லிமிடெட், Brandix லங்கா லிமிடெட், CBL குரூப், DIMO பிஎல்சி, Fairway ஹோல்டிங்ஸ் (பிரைவட்) லிமிடெட், Hela Clothing, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, Jetwing, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, London Stock Exchange Group, MAS ஹோல்டிங்ஸ், தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி, சணச அபிவிருத்தி வங்கி, South Asia Gateway Terminals, மற்றும் Standard Chartered Bank ஆகியன அடங்குகின்றன.

IFC வெளியீடான ‘Sri Lankan Business Advance Gender Equality’ மூலமாக 2018 மார்ச் மாதம் முதல் 2019 டிசம்பர் மாதம் வரை முன்னெடுக்கப்பட்ட SheWorks Sri Lanka பங்காண்மையினூடாக எய்தப்பட்ட வியாபார பெறுபேறுகள் தொடர்பான ஆழமான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

IFC பற்றி

உலக வங்கியின் துணை நிறுவனமான IFC, வளர்ந்து வரும் நாடுகளில் தனியார் துறையில் கவனம் செலுத்தும் மாபெரும் சர்வதேச அபிவிருத்தி நிறுவனமாக திகழ்கின்றது. உலகளாவிய ரீதியில் 2000 க்கும் அதிகமான வியாபாரங்களுடன் நாம் பணியாற்றுவதுடன், சந்தைகள் மற்றும் வாய்ப்புகளை உருவாக்குவதில் எமது மூலதனம், நிபுணத்துவம் மற்றும் தாக்கம் செலுத்துவது போன்றன பயன்படுத்தப்படுகின்றன. 2020 ஆம் ஆண்டில், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் மற்றும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் 22 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாம் முதலீடு செய்திருந்தோம், இதனூடாக வறுமை ஒழிப்பு மற்றும் சுபீட்சத்தை பரப்புவதற்கு தனியார் துறைக்கு வலுவூட்டியிருந்தோம். மேலதிக தகவல்களுக்கு www.ifc.org எனும் இணையத்தளத்தை பார்வையிடவும்.