Take a fresh look at your lifestyle.

HNB குழுமம் 2020 இல் ஆரம்ப 9 மாதங்களில் 8.8 பில்லியன் ரூபாவை வரிக்கு பின்னரான இலாபமாக பதிவுசெய்துள்ளது

50
HNB ஆரம்ப 9 மாதங்களுக்காக 7.7 வரிக்கு பின்னரான இலாபமாக (PAT) அறிக்கை செய்துள்ளதுடன் அந்த காலப்பகுதியில் HNB குழுமம் 8.8 பில்லியன் ரூபாவை வரிக்கு பின்னரான இலாபமாக அறிக்கை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2020இன் முதல் 9 மாதங்களுக்காக பெற்றுக் கொண்ட நிதி செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த HNBஇன் தலைவர் தினேஷ் வீரக்கொடி, கொவிட் -19 தொற்றுநோயின் முதல் அலை இலங்கையில் மிகவும் வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. என்றபோதிலும் உலகளாவிய ரீதியில் தொற்றுநோய் படிப்படியாக அதிகரித்ததன் விளைவாக தற்போது நாம் தேசம் என்ற வகையில் மீண்டுமொருமுறை தீர்மானம் மிக்க ஒரு கட்டத்திற்கு வந்துள்ளோம். தொற்றுநோயினால் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சவால்களுக்கு மத்தியிலும் HNB தமது நிதிப் பலத்தின் நிலையான தன்மை மற்றும் சமாளிக்கக் கூடிய தன்மையைக் காட்டியது. அண்மையில் முடிஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் சேர்விஸ் நிறுவனத்தினால் முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கையின் இறையாண்மை தரப்படுத்தலில் இரு இடங்களால் வீழ்ச்சியடைந்தமையினால் நாடு பின்னடைவை சந்தித்தது. இந்த பின்னடைவின்போது நாட்டிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோருக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக பிரான்ஸ் அபிவிருத்தி நிதி நிறுவனமான PROPARCO உடன் 60 மில்லியன் அமெரிக்கன் டொலர் நீண்டகால கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட HNB க்கு முடிந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். என தெரிவித்தார்.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நிதி நிலைமைகள் குறித்து இலேசான கொள்கையொன்றை பின்பற்றுவதை அடிப்படையான 400 லட்சம் சராகரி எடையுள்ள அத்தியாவசிய கடன் விகிதம் (AWPLR) வீழ்ச்சியடைந்தது. 2019ஆம் ஆண்டின் இதே காலப்பகுதிக்கு சமாந்திரமாக வட்டி விகிதம் 8.7% ஆல் குறைவடைந்து வங்கியின் வட்டி வருமானம் 79.6 பில்லியன் ரூபாவால் வீழ்ச்சியடைந்தது. கடந்த வருடத்திற்கு சமாந்திரமாக வட்டி செலவீனம் 7.3% ஆல் குறைந்து 45.8 பில்லியன் ரூபாவாக பதிவானது. அதன் விளைவாக தேறிய வட்டி வருமானம் (NII) கடந்த வருடம் முதல் 9 மாதங்களுக்கு சமாந்திரமாக 10.6% ஆல் குறைந்து 33.8 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 தொற்றுநோயின் தொடர்ச்சியான அழுத்தங்கள் இறக்குதி தொடர்பில் விதிக்கப்பட்ட எல்லைகள், வெளிநாட்டு கார்ட் கொடுக்கல் வாங்கல் அளவு குறைவடைந்தமை, இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்த கொவிட் நிவாரண யோசனை முறைமையின் ஒரு அங்கமாக பல்வேறு கட்டண குறைப்பு மற்றும் பொருளாதாரம் தொடர்பில் கீழ் மட்டத்திலுள்ளவர்களின் நடவடிக்கை போன்றவற்றின் விளைவாக தேறிய கட்டணம் மற்றும் தரகுப்பண (Commission) வருமானம் கடந்த வருடத்திற்கு சமாந்திரமாக 18.9% ஆல் குறைவடைந்து 5.4 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்தது. என்றபோதிலும், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி மற்றும் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு டிஜிட்டல ஊடகங்களுக்கு மாறியமை காரணமாக டிஜிட்டல் வங்கி சேவைகள் மற்றும் தளங்களினால் பெற்ற வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை வங்கி வெளிக்காட்டியுள்ளது.

HNBஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதன் அலஸ் கருத்து தெரிவிக்கையில், கொவிட்-19 இன் இரண்டாவது அலை ஆரம்பிப்பதற்கு முன்னர் கடந்த சில மாதங்களில் சிறந்த பாதையில் பயணித்துக் கொண்டிருந்தது. என்றபோதிலும், இது உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள பொதுவான நிலைமையாகவே கருதப்படுகிறது. அதனால் நாட்டில் கீழ் மட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோரை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக புதிய பொது நிலைமைக்கு வடிவமைப்பதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவது முக்கியமாகும். அதன்படி, வங்கி செப்டெம்பர் மாதம் ஆகும் போது கொவிட்-19 தொற்றுநோயினால் அழுத்தங்களுக்கு உள்ளான தனிநபர்கள் மற்றும் தொழில்முனைவோர் 85,000க்கும் அதிகமானவர்களுக்கு கடன் தாமத நிவாரணம் வழங்குவதற்கு மேலதிகமாக, இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து சௌபாக்கியா கடன் யோசனை முறையின் கீழ் 24 பில்லியன் ரூபா பணி மூலதன கடன் வசதிகள் வழங்கப்பட்டன. கடந்த இரு வருடங்களாக எதிர்கொண்ட பேராபததான நிலைமையினால் இடையூறுகளை எதிர்கொண்ட பிரிவுகளுக்கு தேவையான நிதி ஒத்;துழைபபுக்களை பெற்றுக் கொடுக்க நாட்டிலுள்ள வங்கித்;துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி எமது பொருளாதாரத்தில் மிகவும் கவனம் செலுத்தப்பட்ட பிரிவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு குறித்த அதிகாரிகள் நிலையான, நீண்டகால தீர்வுகள் மற்றும் மிகவும் நிலையான தீர்வு நிதி முறைமைகளை அறிமுகம் செய்துள்ளதாக நாம் நம்புகிறோம். என தெரிவித்தார்.

வங்கியின் செயற்படாத கடன் விகிதம் (NPA) 2019 டிசெம்பர் மாதத்தில் 5.91%க்கு மற்றும் 2020 ஜூன் 30ஆம் திகதியில் 6.4% க்கு சமாந்திரமாக 6.51% ஆக பதிவாகியிருந்தது. என்றபோதிலும்; 2019 டிசெம்பர் மாதத்தில் அரசுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட 11.5 பில்லியன் ரூபா செலுத்தப்படாத கடன் அளவு 2020 ஒக்டோபர் மாதத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டது. இந்த ஒழுங்குமுறை மேற்கொண்டதனால் 2020 செப்டெம்பர் மாதத்தில் செயற்படாத கடன் விகிதம் 6.51% இருந்து 5.06% குறைத்துக் கொள்ள முடிந்துள்ளது. குறித்த காலப்பகுதி குறித்து சேத சுமை 2019ஆம் ஆண்டின் முதல் 9 மாத காலத்துடன் ஒப்பிடுகையில் 45.6% ஆல் அதிகரித்து 11.8 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.