Take a fresh look at your lifestyle.

ஏற்றுமதியில் புதிய உயரத்தைத் தொட்டுள்ள ஹேலிஸ் ஆறு மாதங்களில் சிறந்த பலன்கள் எனவும் அறிவித்துள்ளது

35

2020/21 நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் ஹேலிஸ் குழுமம் சாதனையுடன் கூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது, வரிக்கு முந்தைய இலாபம் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது சுமார் 5.52 பில்லியன் ரூபாவாக அதிகரித்திருந்தது. மதிப்பாய்வு செய்யப்பட்ட காலப்பகுதியில் குழுமத்தின் செயற்பாட்டு வரலாற்றில் வலுவான ஆறுமாத செயல்திறனைப் பிரதிபலிக்கிறது, மேலும் குழுமத்தின் ஏற்றுமதி சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளின் முக்கிய செயல்திறனில் வலுவான முன்னேற்றங்கள் மற்றும் ஹேஸ்மார்ட் நிகழ்ச்சித் திட்டம் மூலம் இயக்கப்பாட்டு செயல்திறனில் செயல்திறன் மிக்க முயற்சிகளும் இதில் அடங்குகின்றன. கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக பல்வேறு சவால்கள் இருந்த போதிலும், குழு அதன் வர்த்தக நடவடிக்கைகளை தொடர்ச்சியாக உறுதி செய்தது, அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் சீரான வழிநடத்தல்களின் கீழ் செயற்படுவதுடன், அதன் ஊழியர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு தொடர்ந்து மதிப்பு சேர்க்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது.

வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன்தொகை (EBITDA) ஆகியவற்றுக்கு முந்தைய வருவாய் 38% ஆல் அதிகரித்து 13.32 பில்லியன் ரூபாவாக இருந்தது. சுத்திகரிப்பு மற்றும் கை சுத்திகரிப்பு துறைகளில் மேம்பட்ட இலாபத்தன்மை திறன் விரிவாக்கம், சிறந்த தயாரிப்புக் கலவை, பயனுள்ள விநியோக சங்கிலி நிர்வகிப்பு மற்றும் செலவு செயல்திறன் ஆகியவை இந்த அதிகரிப்புக்கு காரணமாகவுள்ளது. மேலும் குழுவின் நுகர்வு மற்றும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளதுடன், இதற்கு காரணம் வலிமையான விற்பனை செயன்முறை மற்றும் தற்போதைய செலவு செயல்திறன் ஆகியவையே ஆகும்.

விவசாயம் மற்றும் ஆடைத் துறைகளும் வலுவான செயல்திறனை அளித்த அதேநேரம் தேயிலை மற்றும் ஏற்றுமதிப் பிரிவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியால் பெருந்தோட்டத்துறையின் இலாபம் உறுதி செய்யப்பட்டது. உல்லாச விடுதித்துறை தொடர்ந்தும் அபாய சமிஞ்ஞையைக் காட்டி வருவது புரிந்;து கொள்ளத்தக்கது, மேலும் அநாவசிய விடயங்களைக் குறைப்பதற்கும் வளப்பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும் செயலூக்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், வட்டி மற்றும் வரிக்கு முந்தைய ஒருங்கிணைந்த வருவாய் (EBIT) 39% ஆல் அதிகரித்து 9.83 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்தது.

சந்தை வட்டி விகிதங்களைக் குறைப்பதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து குழுமம் வங்கிகளுடன் சாதகமான விதிமுறைகளை வெற்றிகொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதால் ஒட்டுமொத்த இலாபத்தின் நிதிச் செலவுகள் 15% வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்விளைவாக, குழுவின் வரிக்கு முந்தைய இலாபம் மூன்று மடங்காக அதிகரித்து 5.52 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்ததுடன் வரிக்கு பிந்தைய இலாபமாக 3.82 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்ததுடன் இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 640.86 மில்லியனால் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. முக்கியமான வர்த்தக நடவடிக்கைகளினால் கிடைத்த வலுவான வருவாய், Haycarb PLC, சிங்கர் ஸ்ரீலங்கா PLC மற்றும் ஹேலிஸ் பி.எல்.சி. ஆகயவற்றின் பங்கு விலைகள் மற்றும் வர்த்தக செயற்பாடுகளில் ஏற்பட்ட குறிப்பிடதக்க அதிகரிப்பு ஆகியவே இதற்கு காரணமாகும்.

தற்போதைய வளர்ச்சி வேகத்தைத் தக்கவைத்துக் கொள்ள எமது ஏற்றுமதி சார்ந்த வர்த்தகங்களை நாம் எதிர்பார்த்துள்ளோம், அடுத்தடுத்த காலாண்டுகளில் குறிப்பிடத்தக்க வருவாய் வளர்ச்சியை எட்டமுடியுமெனவும் நம்புகிறோம். என ஹேலிஸ் பி.எல்.சி.யின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹான் பண்டித்தகே தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், எங்களது சவாலான சூழலிலும் எமது விநியோகத்தை உறுதி செய்த எங்களது உணர்ச்சி மிக்க, அர்ப்பணிப்பு மற்றும் நேர்த்தியான பணியாளர்கள் விநியோகத்தை மேற்பார்வை செய்து நிர்வகித்தனர். கொவிட்-19 தொற்றுநோய்களின் சமீபத்திய தொற்று அதிகரிப்பால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் கவனமாக நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மேலும் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைய கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றோம். என தெரிவித்தார்.

ஹேலிஸ் பி.எல்.சி. நிறுவனத்தின் பணிப்பாளர் சபையிலுள்ள முக்கிய பிரதிநிதிகளான மொஹான் பண்டித்தகே (தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி), தம்மிக்க பெரேரா (இணைத் தலைவர்), சரத் கணேகொட, ராஜித்த காரியவசம், கலாநிதி ஹர்ஷ கப்ரால் PC ருவான் வைத்தியரத்ன, ஹிஷாம் ஜமால்டீன், அரவிந்த பெரேரா, ஜயந்தி தர்மசேன, ரொஹான் கார் மற்றும் காமினி குணரத்ன ஆகியோர் ஆவர்.