Take a fresh look at your lifestyle.

செலான் டிக்கிரி சிறுவர் சேமிப்புக் கணக்கானது தொடர்ச்சியாக 8 வது ஆண்டாகவும் உலக சிறுவர் மாதத்தை கொண்டாடுகிறது

76

இலங்கையில் முன்னோடி சிறுவர் சேமிப்புக் கணக்கான செலான் டிக்கிரி ஆனது, ஒக்டோபர் மாதத்தில் வெற்றிகரமான 8 வது ஆண்டாக செலான் டிக்கிரி உலக சிறுவர் மாதத்தை சிறப்பித்து இளம் சேமிப்பாளர்களை ஊக்குவித்து கொண்டாடுகிறது. சிறுவர்கள் இளம் பருவத்திலேயே ஒரு வலுவான நிதி அடித்தளத்தை உருவாக்குவதற்காக, அவர்களுள் சேமிக்கும் பழக்கத்தை வளர்ப்பது முக்கியமென அன்புடன் அரவணைக்கும் செலான் வங்கி நம்புகிறது.

சிறார்கள் இயல்பாகவே பரிசுகளைப் பெற விரும்புவார்கள். அவை எளிமையான வடிவத்தில் இருந்தாலும், அவர்களின் சிறிய உலகங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. இவ்வருடம் தங்கள் இளைய வாடிக்கையாளர்களின் விருப்பங்களைப் புரிந்துகொண்ட செலான் அணி, அனைத்து இளம் சேமிப்பாளர்களுக்கும் பிரத்தியேக பரிசுகளை வழங்க உள்ளது. சிறுவர் சைக்கிள், டெப் கணனிகள், ஸ்கூட்டர்கள் மற்றும் LED TVக்கள் மற்றும் பல விளையாட்டுப் பொருட்கள் இளம் வைப்பாளர்கள் பரிசாக பெற்றுக்கொள்ள முடியும். முதல் முறையாக, நவீனகால சிறுவர்களின் கனவுகளுக்கு ஏற்ப, ஒக்டோபர் மாதத்தில் ரூ.1 மில்லியனுக்கு மேல் வைப்புகளுக்கு வழங்கப்படும் ப்ளே ஸ்டேஷன் (PS4) மற்றும் ஹோம் தியட்டர் சிஸ்டம்கள் ஆகியவை செலான் டிக்கிரி பரிசு வரலாறை

இந்த விசேட நிகழ்வைக்குறித்து கருத்து தெரிவித்த செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை தலைமை அதிகாரி காமிக டி சில்வா, நாட்டின் மிகவும் பிரியமான சிறுவர் சேமிப்பு தயாரிப்புகளில் ஒன்றான செலான் டிக்கிரி, குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்க்கையின் நம்பிக்கையையும் கனவுகளையும் தொடர அனுமதிக்கும் நிதி வலிமையைப் பாதுகாக்க சரியான தளத்தை வழங்குவதில் தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. பல ஆண்டுகளாக, பலவிதமான பரிசுத் திட்டங்கள் மற்றும் சலுகைகள் மூலம் சிறார்களுக்கு வெகுமதியளித்து ஆர்வமூட்டுவதன் மூலம் சிறுவயதிலிருந்தே சேமிப்பைத் தொடங்க செலான் டிக்கிரி ஊக்குவித்துள்ளது. உலக குழந்தைகள் தினம் ஒக்டோபர் 01 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது, இருந்தாலும் இளம் சேமிப்பாளர்களை ஊக்குவிப்பதற்காக பிரத்தியேக பரிசுத் திட்டங்கள் மற்றும் சலுகைகளுடன் ஒரு மாதம் முழுவதும் கொண்டாட்டங்களை விரிவுபடுத்தும் இலங்கையில் உள்ள ஒரே வங்கி செலான் வங்கியாகும். எமது தற்போதைய மற்றும் புதிய விளம்பர நடவடிக்கைகள் மூலம் செலான் டிக்கிரி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சிறுவர் சேமிப்புக் கணக்கு ஒன்று வழங்கும் மிகச் சிறந்த பரிசுகளைப் பெறுவதற்கும், பலவிதமான மதிப்புமிக்க நன்மைகளை அனுபவிப்பதற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. வருங்கால சந்ததியினரின் மாறிவரும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தொடர்ச்சியான வங்கி ஆதரவை வழங்கி, வெற்றிகரமான எதிர்காலத்தை வழிநடத்த அவர்களுக்கு செலான் வங்கி அதிகாரம் அளிக்கிறது. அனைவரையும் இந்த ஆண்டின் நிகழ்வுகளில் பங்குபெற்று பிரத்தியேக நன்மைகளை அனுபவிக்க செலான் அணி ஊக்குவிக்கிறது. என்று கூறினார்.

சிறு வயதிலேயே சேமிப்பதன் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு கற்பிப்பது ஒரு அன்பான செயலாகும், ஏனெனில் இது அவர்களின் எதிர்கால இலக்குகளையும் கனவுகளையும் வலுப்படுத்தும். பெற்றோர்கள், தாத்தா, பாட்டி, அத்தைகள், மாமாக்கள் மற்றும் உடன்பிறப்புகள் ஆகியோரை தங்கள் அன்புக்குரிய சிறுவர்களுக்கு செலான் டிக்கிரி குடும்பத்தில் சேரும் வாய்ப்பை வழங்குமாறு செலான் ஊக்குவிக்கிறது. செலான் டிக்கிரி மூலம் உங்கள் பிள்ளைகள் தனது சேமிப்பிற்கான போனஸ் வட்டி மற்றும் அற்புதமான பரிசுகள் போன்ற நன்மைகளைப் பெறுவார்கள், மேலும் சிறு வயதிலேயே அவர்களின் எதிர்காலத்திற்கான சேமிப்பின் முக்கியத்துவத்தைக் கற்றுக்கொள்வார்கள்.

பிற்ச் மதிப்பீடுகளால் செலான் வங்கி, தேசிய நீண்டகால மதிப்பீட்டை ‘A (LKA)’ என ஒப்புதல் அளித்து, செயல்திறன் சிறப்பைக் கொண்ட நிதி ரீதியாக நிலையான அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்பரன்சி குளோபல் நிறுவனத்தால் நிறுவன அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மைக்காக பொது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், செலான் வங்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தது, மேலும் வங்கி இப்போது S&P Dow Jones SL 20 குறியீட்டின் ஒரு பகுதியாகும். இந்த சாதனைகள் செலான் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் அனைத்து முயற்சிகளிலும் சிறந்து விளங்குவதற்கான ஒரு சான்றாகும். சிறிய மற்றும் நடுத்தர, சில்லறை மற்றும் நிறுவனங்கள் என வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வங்கி, 172 கிளைகள் மற்றும் நாடு முழுவதும் பரந்துள்ள 216 ATM களைக் கொண்ட வலையமைப்புடன் அதன் கால்தடத்தை விரிவுபடுத்தியுள்ளது.

நிதி பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு www.seylan.lk ஐ அணுகவும்.