Take a fresh look at your lifestyle.

உலகப் புகழ்மிக்க வேர்ள்ட் மரிடைம் பல்கலைக்கழகத்தின் சிறந்த முன்னாள் மாணவருக்கான விருது பேராசிரியர் (கப்டன்) நாலக ஜயகொடிக்கு வழங்கி கௌரவிப்பு

22
தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பேராசிரியர் (கலாநிதி) கப்டன் நாலக ஜயகொடி கடல்சார் துறைக்கு ஆற்றியுள்ள பெரும் பங்களிப்புக்கு கௌரவிக்கும் வகையில் சுவீடனின் மல்மோவிலுள்ள வேர்ள்ட் மரிடைம் பல்கலைக்கழகத்தினால் சிறந்த முன்னாள் மாணவருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெற்றுக் கொண்ட தெற்காசியாவைச் சேர்ந்த முதல் நபர் எனும் பெருமையை பேராசிரியர் (கலாநிதி) கப்டன் நாலக ஜயகொடி பெற்றுள்ளார்.

பட்டமளிப்பு விழாவின் போது இன்டர்நஷனல் மரிடைம் நிறுவனத்தின் (IMO) செயலாளர் நாயகமும், வேர்ள்ட் மரிடைம் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கிட்டாக் லிம் இந்த பெருமைக்குரிய விருதை வழங்கியிருந்தார். கடல்சார் கற்கை மற்றும் பயிற்சி (MET) விஞ்ஞான மாஸ்டர்ஸ் (MSc) பட்டத்தை வேர்ள்ட் மரிடைம் பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியர் ஜயகொடி பெற்றுள்ளார். 2000 – 2001 ஆம் ஆண்டில் இரண்டு வருட கால முழுநேர கற்கையாக இந்த கற்கையை அவர் தொடர்ந்திருந்ததுடன், தாம் பேராசிரியராக கடமையாற்றியிருந்த, சீனாவின் Dalian Maritime பல்கலைக்கழகத்திடமிருந்து கடல்சார் விவகாரங்களுக்கான Doctor of Science (DSc) பட்டக் கற்கையை தொடர்வதற்கு முன்னதாக இதனை பூர்த்தி செய்திருந்தார். வேர்ள்ட் மரிடைம் பல்கலைக்கழகத்தில் இவர் கற்கையை தொடர்ந்த காலப்பகுதியில் வகுப்பில் முன்னிலையாளராக திகழ்ந்ததுடன் பல்வேறு செயற்பாடுகளில் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தார்.

இந்த சிறந்த சாதனை தொடர்பாக வேர்ள்ட் மரிடைம் பல்கலைக்கழகத்தின் தலைவர் கிளியொபெட்ரா டவும்பியா-ஹென்ரி கருத்துத் தெரிவிக்கையில், ´எமது பட்டதாரிகளுடன் எப்போதும் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருக்க முடிவது சிறப்பான விடயமாகும். அவ்வாறு சிறப்பாக செயலாற்றும் எமது பட்டதாரி ஒருவரை கௌரவிக்க முடிந்துள்ளதுடன், கல்வித் துறையில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஒருவருக்கு இந்த வாய்ப்பை கௌரவிப்பை வழங்க முடிந்தமை மேலும் மகிழ்ச்சியூட்டுகின்றது. நாம் ஒன்றிணைந்து செயலாற்றினால், எமது உலகில் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தலாம் மற்றும் அனைவருக்கும் நிலைபேறான அபிவிருத்தியை உறுதி செய்யலாம் என்பதற்கு பேராசிரியர் ஜயகொடி ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளார்.´ என்றார்.

மாணவர் அவையிலிருந்து உப தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதலாவதும் ஒரே இலங்கையர் எனும் பெருமையை பேராசிரியர் ஜயகொடி தன்வசம் கொண்டுள்ளார். தொடர்ச்சியான இரண்டு வருடங்களாக Malmo Dragon படகு சவாரி பந்தயத்தில் இவர் வேர்ள்ட் மரிடைம் பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்ததுடன்ரூபவ் உதைப்பந்தாட்டம்ரூபவ் பூப்பந்தாட்டம், நீச்சல், ஸ்கொஷ் மற்றும் மெய்வல்லுநர் என பல விளையாட்டுகளிலும் பங்கேற்று வெற்றிகளை சுவீகரித்திருந்ததுடன், 2001 ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் எனும் கௌரவிப்பையும் பெற்றுக் கொண்டார்.

Northshore International Campus இன் உப வேந்தரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர் நாலக ஜயகொடி கருத்துத் தெரிவிக்கையில், ´வேர்ள்ட் மரிடைம் பல்கலைக்கழகத்திடமிருந்து இந்த பெருமைக்குரிய விருதைப் பெற்றுக் கொள்வதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். இதை எய்துவதற்கு சாத்தியமாக அமைந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். இரு தசாப்த காலப்பகுதிக்கு முன்னதாக வேர்ள்ட் மரிடைம் பல்கலைக்கழகத்தில் நான் பெற்றுக் கொண்ட மனம்மறவாத அனுபவங்களை எப்போதும் நான் நினைத்துப் பார்ப்பதுண்டு. நான் இங்கு பயின்ற விடயங்கள் மற்றும் சாதனைகள் போன்றன எனது எதிர்பார்ப்புகள் மற்றும் ரூடவ்டுபாடுகளில் பெருமளவில் பங்களிப்பு வழங்கியிருந்தது என்பதில் சந்தேகமில்லை.´ என்றார்.

இதற்கு முன்னதாக, CINEC இன் உப தலைவராக பேராசிரியர் ஜயகொடி கடமையாற்றியிருந்தார். 1998 ஆம் ஆண்டில் இந்த உயர் கல்வி நிலையத்தில் விரிவுரையாளராக இணைந்து கொண்டதுடன், துரிதமாக சிரேஷ்ட விரிவுரையாளர், பிரிவின் தலைவர் மற்றும் பீடாதிபதி மற்றும் பணிப்பாளர் எனும் பதவிகளுக்கு உயர்ந்தார். அரச மற்றும் தனியார் உயர்கல்விகளுக்கு இவரின் பெருமளவு பங்களிப்பு மற்றும் நாட்டின் கடல்சார் துறைக்கு ஆற்றியுள்ள பங்களிப்பு போன்றன என்றும் போற்றத்தக்கவையாக அமைந்துள்ளன.

கல்விச் செயற்பாடுகளில் ரூடவ்டுபடும் முன்னதாக பேராசிரியர் ஜயகொடிரூபவ் வணிகக் கப்பலின் மாஸ்டராக செயலாற்றியிருந்தார். 1984 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையில் பல்வேறு நிலைகளில் வௌவேறு கப்பல்களில் பணியாற்றியுள்ளார். 1984 ஆம் ஆண்டு இவரின் கடல்சார் பயிற்சி ஆரம்பமானது. 1989 ஆம் ஆண்டில் Australian Maritime College இல் Certificate of Competency (CoC) as Class II Second Officer எனும் முதல் சான்றிதழைப் பெற்றுக் கொண்டார். பின்னர், 1994 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவைச் சேர்ந்த Royal Melbourne Institute of Technology (RMIT) இலிருந்து Master Mariner தகைமையையும் பெற்றுக் கொண்டார்.

இவர் அனுபவம் வாய்ந்த கடல் மாலுமியாவார். 90 க்கும் அதிகமான நாடுகளுக்கு பயணம் செய்துள்ளதுடன், வௌவேறு கலாசாரத்தைச் சேர்ந்த மக்களுடன் பணியாற்றியுள்ளார். இலங்கையின் முதலாவதும் ஒரே Master Mariner என்பதையிட்டு இவர் பெருமை கொள்வதுடன், doctorate பட்டம் பெற்று பேராசிரியராக திகழும் உலகில் காணப்படும் ஒரு சிலரில் ஒருவராகவும் அமைந்துள்ளார்.

பேராசிரியர் ஜயகொடி பெற்றுக் கொண்ட ஏனைய இரு குறிப்பிடத்தக்க விருதுகளில், IES இந்தியாவின் International Leadership Innovation Excellence Award’ 2019 மற்றும் இலங்கை ஜனாதிபதியின் ‘Award of Academic Excellence’ 2014 ஆகியன அடங்கியுள்ளன.

பேராசிரியர் ஜயகொடி DSc (Cn), MSc (Swe), FNI (UK), FCILT (UK), FIMarEST (UK), CMarTech (UK), Master Mariner (Aus), The Nautical Institute (NI-UK), இலங்கை கிளையின் தவிசாளராகவும் செயலாற்றியுள்ளதுடன், Sri Lanka Association of Non-State Higher Education Institutions (SLANSHEI) இன் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் நிபுணத்துவ சேவைகள் (கல்வி) ஆலோசகராகவும் திகழ்கின்றார். பல்வேறு அரச மற்றும் தனியார் துறை அதிகாரசபைகள் மற்றும் நிறுவனங்களின் முன்னணி ஆலோசகராகவும் இவர் திகழ்கின்றார்.