Take a fresh look at your lifestyle.

கொவிட் தொற்றுநோய் விளைவாக மருத்துவ விநியோக வலைப்பின்னலை பாதுகாப்பதற்காக எடுக்கும் ஒட்டுமொத்த முயற்சிக்கு SLCPI பெரும் வரவேற்பு

44

கொவிட்-19 தொற்றுநோய்க்கு பிரதிபலிக்கும் வகையில், நாடு முழுவதிலும் தொடர்ச்சியாக மருந்து விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக மருந்து விநியோக வலைப்பின்னலுடன் தொடர்புடைய அனைவரும் முன்கூட்டியே வகிக்கும் முயற்சிகளுக்கு இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் (SLCPI) தனது வரவேற்பைப் தெரிவித்துள்ளது.

உலகளாவிய மருந்து தயாரிப்பு மற்றும் விநியோக வலைப்பின்னல்களுக்கு கொரோனா வைரஸ் மூலம் ஏற்பட்டுள்ள சவால்களினால் நாடு முழுவதிலும் உள்ள நோயாளர்களுக்கு தொடர்ச்சியான சிறந்த மருந்துகளை விநியோகித்து வருவதாக சம்மேளனம் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது. மருந்து விநியோக வலைப்பின்னலின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காக அதிலுள்ள உறுப்பினர்களினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

SLCPI இன் பிரதித் தலைவரும் ஜோர்ஜ் ஸ்டுவர் ஹெல்த் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சஞ்ஜீவ விஜேசேகர கருத்து தெரிவிக்கையில், விநியோக வலைப்பின்னலை சிறந்த விதத்தில் நடைமுறைப்படுத்துவதற்காக அரசினதும் மற்றும் உரிய தரப்பினரதும் ஒத்துழைப்புக்கள் முக்கியமாகவுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகள் பூட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்ட உடனேயே SLCPI சுகாதார அமைச்சு, தேசிய மருந்து விநியோக அதிகார சபை மற்றும் குறித்த பிரிவுடன் தொடர்ந்து தொடர்புகளை ஏற்படுத்திய அதிகாரிகளின் பக்கத்திலும் அத்தியாவசிய மருந்து தொகைகளை விடுவிப்பதிலும் எவ்வித சிக்கல்களையும் எதிர்கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியும்.´ என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வருட ஆரம்பத்தில் அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் விளைவாக, நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு தேசிய மருந்து ஒழுங்குவிதிகள் ஆணையத்தின் தீர்மானத்திற்கு அமைய, மருத்துவ உபகரணங்கள், Borderline Products மற்றும் அழகியல் சார்ந்த மருந்து உபகரணங்கள் மற்றும் உபகரண உரிமை பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் எதிர்கால சான்றிதழ்களின் காலாவதி காலம் 2021 ஜூன் 30 வரை நீடித்தல் போன்ற தீர்மானங்கள் எட்டப்பட்டிருந்தன.

பாவனையாளர்களுக்காக மருந்தகங்களில் தொகையாக அல்லது சிகிச்சைப் பொருள்களுக்கான போக்குவரத்து தொடர்பான சான்றிதழ் குறித்த நடைமுறைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மருந்து தயாரிப்பு விநியோக வலைப்பின்னலில் தொடர்புடைய அனைவரும் பொருட்களை விநியோகிக்கையில் சுகாதார அமைச்சினால் விதிக்கப்பட்ட சட்டதிட்டங்கள் பின்பற்றப்பட்டன. இதன்போது ஊழியரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உரிய விதத்தில் எடுக்கப்பட்டிருந்ததையும் உறுதிப்படுத்த வேண்டியிருந்தது. அதன் விளைவாக, அனைத்து விநியோக வாகனமும் தொற்று நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து அந்த செயற்பாடுகளுக்கு தொடர்புபடுத்தும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது வரையில் விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. என அவர் சுட்டிக்காட்டினார்.

தொற்றுநோய் காரணமாக எவ்வித இடையூறும் இல்லாமல் விநியோக நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக சிறந்த பலமான மற்றும் நம்பகமான விநியோக மாதிரியொன்றை உருவாக்குவதற்கு டிஜிட்டல் கருவிகளின் பயன்பாடு பெரும் துணையாக இருந்தன. இந்த நடவடிக்கையின் முக்கியத்துவமானது தொற்று ஏற்படாத நோய்கள் உடைய நோயாளர்களுக்கும் மற்றும் அத்தியாவசிய மருந்து தேவையுள்ளவர்களுக்குமே ஆகும். மருந்து தொகைகளை விரைவாகவும் உச்ச அளவிலும் மேற்பார்வை மற்றும் விநியோகித்ததன் விளைவாக விநியோக வலைப்பின்னல் எதிர்பார்க்கப்பட்ட விதத்தில் நோயாளியை மையமாகக் கொண்டு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலைமையின் கீழ், அத்தியாவசிய மருந்துகளை நாட்டிற்குள் இறக்குமதி செய்வது குறித்து வெளிநாடுகளிலுள்ள பிரதான மருந்து நிறுவனங்களுடன் தொடர்ச்சியாக தொடர்பினை ஏற்படுத்தியுள்ளதை உறுதிப்படுத்தியதற்காக SLCPIஇன் உறுப்பிப்பினர்கள் தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த காலப்பகுதிக்குள்ளும் நோயாளர்களுக்கான மருந்துப் பொருட்களை வீட்டிற்கே கொண்டு வந்துகொண்டுவந்து மருந்துகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை உறுப்படுத்துவதற்காகவும் மருந்து நிறுவனங்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட Online Pharmacies முன்னிலையில் இருந்ததையும் காணக் கூடியதாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.