Take a fresh look at your lifestyle.

இலங்கை மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கு தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான் HCL Technologies நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள கொமர்ஷல் வங்கி

57

சர்வதேச ரீதியாகப் புகழ்பூத்த தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான்களின் உள்ளுர் பிரிவான HCL டெக்னோலஜீஸ் ஸ்ரீலங்காவுடன் தாங்கள் கைகோர்த்துள்ளதாக கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் பயிலுனர்களுக்கும் ஊழியர்களுக்கும் குறைந்த வட்டியில் கல்விக் கடன்களை வழங்குவதற்காக இந்தக் கூட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வங்கியின் இந்த விஷேட கடன் திட்டம் HCL டெக்னோலஜீஸ் நிறுவனத்தின் ஆரம்ப தொழில்நிலை பயிற்சித் திட்டத்தில் இணைந்து கொள்ளும் (Early Career Training Program (ECTP)) நபர்களுக்கு நுழைவுக் கட்டணம் மற்றும் பாடநெறிக் கட்டணம் என்பனவற்றுக்காக வழங்கப்படும். இந்த நிறுவனத்துடனான இணைப் பங்காளி பல்கலைக்கழகங்களில் தொடரப்படும் உயர் கல்விக்கும் இது பயன்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் ECTP பிரதிநிதிகளுக்கு 2 மில்லியன் ரூயபாவரை கல்விக் கடனாக வழங்கப்படும் என்று வங்கி அறிவித்துள்ளது. ´தகவல் தொழில்நுட்பக் கல்வி மேம்பாட்டுக்காக உதவுதல் மற்றும் இலங்கையில் தகவல் தொழில்நுட்ப கல்வித் தளத்தைக் கட்டி எழுப்புதல் என்பன கொமர்ஷல் வங்கியின் இந்த நாட்டுக்கான அர்ப்பணங்களில் எப்போதுமே பிரதான இடம் பிடித்து வந்துள்ளன´ என்று கூறினார் வங்கியின் சந்தைப் படுத்தல் பிரிவு பொது முகாமையாளர் ஹஸ்ரத் முனசிங்க. ‘HCL டெக்னோலஜீஸுக்கு அதன் இலங்கை செயற்பாடுகளின் ஆரம்பம் முதலே ஆதரவளித்து வருவதில் நாம் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். இலங்கையின் தகவல் தொழில்நுட்ப நிபுணர்களுக்கும் மாணவர்களுக்கும் இது பல்வேறு வாய்ப்புக்களை வழங்குகின்றது. உலகளாவிய ஒரு ஜாம்பவானுடன் இணைந்து தங்களை வளர்த்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக அது கருதப்படுவதால் நாம் ஆரம்பம் முதலே அவர்களுடன் ஒத்துழைத்து வருகின்றோம்´ என்று அவர் மேலும் கூறினார்.

இவ்விரண்டு நிறுவனங்களும் இணைந்து செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கைப் பிரகாரம் இந்தப் புதிய பங்குடைமையின் கீழான கடன்கள் உயர் தரம் சித்தி அடைந்த மாணவர்கள் பட்டதாரி மாணவர்கள் பட்டதாரிகள் HCL Technologies Lanka (Pvt) Ltd இன் பயிலுனர்கள் மற்றும் மென்பொருள் பொறியிலாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும்.

இந்த உடன்படிக்கை படி HCL Technologies நிறுவனத்தின் ECTP திட்டத்தில் இணைந்து கொண்டு கொமர்ஷல் வங்கியின் இந்த விஷேட கல்விக் கடனைப் பெற்று தமது பயிற்சி நெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்பவர்கள் அதன் பிறகு HCL நிறுவனத்துக்குள் உள்வாங்கப்படுவர். இந்தப் பிரிவு மாணவர்கள் தமது பயிற்சிக் காலத்தில் சலுகை அடிப்படையிலான கடன் மீளச் செலுத்தல் திட்டத்துக்கும் உரித்துடையவர்கள். அவர்கள் தமது தொழிலை ஆரம்பித்த பின்னரே கடனை மீளச் செலுத்த வேண்டும் என்ற சலுகை அவர்களுக்கு உண்டு என்று வங்கி அறிவித்துள்ளது.

உலகின் ஆயிரம் தலைசிறந்த வங்கிகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி தொடர்ந்து பத்து வருடங்களாக அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இவ்வாண்டு வங்கி அதன் 100 வது அண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. 2019ல் 50க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் விருதுகளை வென்றுள்ள கொமர்ஷல் வங்கி இலங்கையில் 268 கிளைகளுடனும் 873 ATM வலையமைப்புடனும் செயற்படுகின்றது.

கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டதாகவும் மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் நேய்பியுடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது.