Take a fresh look at your lifestyle.

மக்கள் வங்கி தமது சேவை நிலையத்தினை இலங்கை காப்புறுதி தலைமைக் கரியாலய வளாகத்தில் திறந்து வைத்ததது

63

மக்கள் வங்கி தமது சேவை நிலையத்தை இலங்கை காப்புறுதி (SLIC) தலைமைக் காரியாலய வளாகத்தில உத்தியோகபூர்வமாக திறந்து வைத்ததன் மூலம் மக்கள் வங்கி மற்றும் இலங்கை காப்புறுதி (SLIC) க்கும் இடையிலான கூட்டுறவைத் தொடர்கின்றன. இச்சேவை நிலையமானது வணிக நடவடிக்கைகளை சீராக்கவும் மற்றும் பெருநிறுவன உறவுகளை வலுப்படுத்தவும் உதவிடும் பெருநிறுவன டிஜிட்டல் தீர்வுகளை வழங்குவதற்கான மக்கள் வங்கியின் மூலோபாயத்தின் ஒரு பகுதியாகவும் விளங்குகிறது.

மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ, SLIC யின் தலைவர் ஜகத் வெள்ளவத்த மற்றும் மக்கள் வங்கியின் பிரதான நிறைவேற்று அதிகாரி / பொது முகாமையாளர் ரஞ்சித் கொடிதுவக்கு அவர்களுடன பிரதான நிறைவேற்று அதிகாரியான சந்தன எல். அளுத்கம மற்றும் மக்கள் வங்கியின் சிரேஷ்ட உப பொது முகாமையாளர் – சில்லறை வங்கியியல் கே.பீ. ராஜபக்ஷ ஆகியோர் உள்ளடங்கலாக இரு நிறுவனங்களினதும் பெருநிறுவன மற்றும் நிர்வாக முகாமைத்துவ அங்கத்தவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இச்சேவை நிலையத்திலுள்ள ATM களைப் பாவித்து வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியாக 24 மணிநேரமும் கிழமையில் 7 நாட்களும், பணம் மீளப் பெற முடியும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்கிடும் நோக்கத்துடன் அதே நாளில் மக்கள் வங்கி தலைமைக் கிளையில் SLIC சேவையை வழங்கிடும் அலகொன்றும் திறந்து வைக்கப்பட்டது.

பெருநிறுவன வாடிக்கையாளர்களின் வேலைப்பழு மிக்க வாழ்க்கையை எளிதாக்க வடிவமைக்கப்பட்ட end-to-end டிஜிட்டல் அனுபவங்களை உள்ளடக்கிய முழுமையான பெருநிறுவன டிஜிட்டல் தீர்வுகளை, எவ்விடத்திலிருந்தும் தங்கள் ஸ்மார்ட் சாதனத்தைப் பயன்படுத்தி வங்கிப் பரிவர்த்தனைகளைச் செய்திட அவர்களுக்கு உதவுகிறது. பெருநிறுவன இணைய வங்கி (CIB) மற்றும் பெருநிறுவன மொபைல் வங்கி (CMB) மூலம் எவ்வேளையிலும் 30க்கும் அதிகமான வகைகளிலான வங்கிப் பரிவர்த்தனைகளைச் செய்திட இத்தொழில்நுட்பம் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.