Take a fresh look at your lifestyle.

ஏஷியன் பாங்கர் சஞ்சிகையால் 3ஆவது தொடர்ச்சியான ஆண்டாகவும் இலங்கையின் சிறந்த வர்த்தக நிதி வங்கி யாகத் தெரிவானது கொமர்ஷல் வங்கி

54
இலங்கையின் சிறந்த வர்த்தக நிதி வங்கி என, தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாகவும் 2020ஆம் ஆண்டுக்கான ஏஷியன் பாங்கர் பரிமாற்ற விருதுகள் நிகழ்வில், கொமர்ஷல் வங்கி அண்மையில் தெரிவானது. பண முகாமைத்துவம், கொடுப்பனவுகள், வர்த்தக நிதி ஆகியவற்றில் வங்கியின் அடைவுகளுக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

கணக்காய்வு அடிப்படையிலான அணுகுமுறை மூலமாக முழுமையான மதிப்பாய்வொன்று இச்சஞ்சிகையால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்தே, கௌரவமான இவ்விருது, கொமர்ஷல் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. கடுமையான இத்தெரிவு நடைமுறையானது சில மாதங்களாகத் தொடர்ச்சியாக இடம்பெற்றதுடன், இதற்காகப் போட்டியிடும் நிறுவனங்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கக்கூடிய அனைத்துத் தரப்பினரிடத்திலும் பின்னூட்டங்களும் நேர்காணல்களும் பெறப்பட்டிருந்தன. பூகோளத் தலைவர்களும் இது தொடர்பான நிபுணர்களும் ஆலோகர்களாகக் காணப்பட்ட குழுவொன்றால் இது மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கொமர்ஷல் வங்கியின் வர்த்தக நிதிச் சேவைகளைப் பயன்படுத்தும் உள்நாட்டு நிறுவனங்கள், நேர்காணல்களால் இது உறுதிப்படுத்தப்பட்டதோடு போட்டியாளர்களின் சந்தைப் பங்கில் ஏற்பட்ட மாற்றங்களின் மதிப்பாய்வு, வங்கியின் வணிகத்தில் ஒரு பங்காக பரிமாற்ற வணிகத்தின் அளவும் உத்தியியல் முக்கியத்துவமும், மொத்த வருமானத்தில் பரிமாற்ற வணிகத்தின் பங்களிப்பு, வணிகத்தின் ஆண்டுத்தொகைப் பெறுமதியின் வளர்ச்சி, மைய – மீண்டுவரும் வாடிக்கையாளர் தளம், வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் செயற்பாட்டுச் செயற்றிறனினதும் செலவு முகாமைத்துவத்தினதும் நன்மைகள் ஆகியன, வங்கி இவ்விருதை வெல்வதில் தீர்மானகரமாக அமைந்த காரணிகளாகும்.

பிரதானமான தொடர்பாகக் கடனில் தங்கியிராத வங்கியின் கட்டணங்களை அடிப்படையாகக் கொண்ட பொருட்களினதும் சேவைகளினதும் தனித்துவமான அம்சங்கள், வாடிக்கையாளர்களுக்கு அவை வழங்கும் பெறுமதி, மீளாய்வு செய்யப்பட்ட ஆண்டில் வங்கியின் முக்கியமான அடைவுகள் ஆகியவற்றையும், கொமர்ஷல் வங்கிக்கு சிறந்த வர்த்தக நிதி வங்கி என்ற கௌரவத்தை இச்சஞ்சிகை வழங்குவதற்கு முன்னர் கருத்திலெடுத்திருந்தது.

உலகின் ஆயிரம் தலைசிறந்த வங்கிகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி தொடர்ந்து பத்து வருடங்களாக அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இவ்வாண்டு வங்கி அதன் 100 வது அண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. 2019ல் 50க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் விருதுகளை வென்றுள்ள கொமர்ஷல் வங்கி இலங்கையில் 268 கிளைகளுடனும் 875 ATM வலையமைப்புடனும் செயற்படுகின்றது.

கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டதாகவும், மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும், நேய்பியுடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது.