Take a fresh look at your lifestyle.

அறிமுகப்படுத்துகிறோம் Galaxy Z Fold2: எதிர்காலத்தை மாற்றியமைத்திடும்

96

Samsung Sri Lanka அடுத்த தலைமுறைக்கான, foldable device பிரிவைச் சேர்ந்த Samsung Galaxy Z Fold2 இனை அறிமுகப்படுத்தியது. பல மேம்படுத்தல்கள் மற்றும் அர்த்தமுள்ள புதுமைகளால் நிரம்பியுள்ள Galaxy Z Fold2 ஆனது தொழில்நுட்பத்தில் அதிநவீனத்தை அனுபவிப்பவர்களுக்கு புதிய மடிக்கக்கூடிய அனுபவத்தினையும் வழங்குகிறது.

பெரிய Cover Screen உடனும் பிரமாண்டமான பிரதான ஸ்கிறீனுடன் Galaxy Z Fold2 ஆனது திடமான வடிவமைப்பு மற்றும் நிபுணர்களின் கைவினைத்திறனை புதிய அம்சங்களுடன் ஒரு தனித்துவமான மொபைல் அனுபவத்துக்காக ஒருங்கிணைக்கிறது. இது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பல்துறைத் திறனை வழங்குகிறது.

Samsung Sri Lanka வின் முகாமைத்துவப் பணிப்பாளரான கெவின் சங்சு யூ கருத்து தெரிவிக்கையில், “Samsung இனரான நாம் புத்தாக்கத்தின் எல்லைகளை விஸ்தரிப்பதாக நம்புகிறோம். எமது முந்தைய foldable ஸ்மார்ட் ஃபோன்களை மிகப்பெரிய வெற்றியாக மாற்றியதன் மூலம் இலங்கை, புதிய தொழில்நுட்பத்தின் மீதான தமது அன்பைக் காட்டியுள்ளது எனப் புலப்படுகிறது. Galaxy Z Fold2 உடன் எதிர்காலத்தை நோக்கி, இன்னுமொரு நடவடிக்கையை எடுத்து வருகிறோம். நாம் எமது நுகர்வோருக்கு புதிய உள்ளுணர்வு சார் அனுபவங்களை வழங்கிடவுள்ளோம்.

மேம்பட்ட வன்பொருள் மற்றும் பயனர் அனுபவம், Google மற்றும் Microsoft உடனான இத்தொழிற்துறையில் முன்னணி வகிக்கும் பங்காளித்துவம் போன்றவற்றுடன் மொபைல் சாதனத்திற்கான புதிய யுகத்தை நாம் வெளிப்படுத்துகிறோம்.´

புதிய மாற்றப்பட்ட வடிவமைப்பு

Galaxy Z Fold2 ஆனது திடமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பொறியியலை ஒன்றிணைத்து தம்மகத்தே கொண்டுள்ளது. எனவே நீங்கள் ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் இதைப் பயன்படுத்திட முடியும். 6.2” Infinity-O Cover Screen, அதிகபட்ச பயன்பாட்டினை வழங்குகிறது. எனவே ஒவ்வொரு முறையும் உங்கள் மொபைலினை திறக்காமல் (unfold) உங்களுக்கான மின்னஞ்சலை, திசையை மற்றும் உள்ளடக்கங்களை சரிபார்த்துக் கொள்ள உங்களுக்கு முடியும். திறக்கும் போது 7.6 அங்குலங்களிலான பெரிய பிரதான திரை, தடிப்பம் குறைக்கப்பட்ட கரை மற்றும் நொச் அற்ற (notch-less) முன் கமரா, மென்மையான ஸ்குரோலிங் மற்றும் விளையாட்டுக்கான 120Hz தகவமைப்பு புதுப்பிப்பு வீதம் என்பவற்றின் மூலம் உங்களை மூழ்கடிக்கச்செய்து விடும். இவ்வனுபவத்தினை பூர்த்தி செய்திட Galaxy Z Fold2 ஆனது இன்று வரை Galaxy சாதனங்களில் இல்லாத சிறந்த டைனமிக் ஒலியுடன் வருகிறது. இது மேம்பட்ட stereo effect இனை வழங்குவதுடன் high-dynamic dual speakers உடன் தெளிவான ஒலியையும் வழங்குகிறது.

உங்களுக்கு விரும்பியவாறு படம் எடுத்துப் பார்த்திடுங்கள்.

Galaxy Z Fold2 இன் தனித்துவமான புத்தாக்கமிக்க மடிக்கக்கூடிய வகையிலான மற்றும் அதிநவீன வடிவமைப்பு மொபைல் அனுபவங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றது. Galaxy Z Fold2 இன் கவர் மற்றும் முதன்மைத்திரைக்கு இடையிலான எல்லையைத் தாண்டி, விரிவாக்கப்பட்ட பயன்பாட்டினை வழங்கிட App தொடர்ச்சியுடன் Flex mode இனையும் இணைக்கிறது. உங்கள் சரியான விருப்பங்களுக்கேற்ப மடித்து வைப்பதிலிருந்து விரிப்பது வரை உங்கள் உள்ளடக்கங்களை உருவாக்கிடவும் பார்த்திடவும் இந்த நெகிழ்வுத்தன்மை மூலம் முடியும்.

ஒவ்வொரு தருணத்தையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்

Galaxy Z Fold2 ஆனது அடுத்த தலைமுறைக்கான மொபைல் உற்பத்தித் திறனை மேம்பட்ட பல்பணித்திறன்களுடன் ஒருங்கிணைக்கிறது. இதன் டெப்லட் இன் அளவிலுள்ள பிரதான திரையை உங்கள் பணிக்கு ஏற்ற பாணியில் பொருத்துவதன் மூலம் உங்கள் நாளின் பெரும் பகுதியை செயற்படுத்திக் கொள்ளுங்கள். Galaxy தலைமையின் நீண்ட கால பாரம்பரியத்தை உருவாக்கி Samsung ஆனது மீண்டும் ஒருமுறை மொபைல் கண்டுபிடிப்பு மற்றும் பொறியியல் எல்லைகளை விஸ்தரிக்கிறது. Galaxy Z Fold2 இன் மூலம் பயனர்கள் 5G band உடன் பொருந்தக்கூடிய அதன் இயலுமைத் தன்மைக்கு ஏற்ப (இலங்கையில் 5G வலையமைப்பு கிடைப்பதைப் பொருத்து) அதிவேக அனுபவத்தினைப் பெறலாம். Galaxy Z Fold2 ஆனது சிக்கலற்ற பணியின் உற்பத்தித் திறனுக்காக Samsung DeX wireless இணைப்பினையும், அருகிலுள்ள பகிர்வுக்காக files, photos அல்லது videos போன்றவற்றை விரைவாகவும் இலகுவாகவும் பகிரக்கூடிய UWB (Ultra Wide Band) தொழில்நுட்பத்தினையும் தம்மகத்தே ஒருங்கிணைத்து வைத்துள்ளது.

கிடைக்கப்பெறும் தன்மை

Galaxy Z Fold2 ஆனது உன்னதமான Mystic Bronze நிறத்தில், தனித்துவமான தொலைத் தொடர்பாடல் பங்காளரான Dialog மற்றும் அங்கிகரிக்கப்பட்ட முகவர்களான John Keells Office Automation இலும் Softlogic Retail இலும் பெற்றுக் கொள்ள முடியும். Galaxy Z Fold2 வின் முதலாவது கொள்வனவின் போது ஒரு முறை திரை மாற்றிடும் சலுகையை வாடிக்கையாளர் பெறுவர். Galaxy Premier Service இன் 0117 540 540 என்ற உடனடி எண்ணுக்கு அழைத்து, Galaxy ZFold2 வாடிக்கையாளர்களுக்கு தேவையான உதவியைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது Samsung Members இல் வாடிக்கையாளர்கள் தங்கள் விசாரணைகளை post செய்வதன் மூலமும்Live Chat மூலமும் அவர்களுக்கான உதவிகளையும் நிகழ் நேர தீர்வுகளையும் பெற்றுக் கொள்ளவும் முடியும்.