Take a fresh look at your lifestyle.

சொஃப்ட்லொஜிக் ஃபைனான்ஸ் ரூ. 1.9 பில்லியன் உரிமைகள் வெளியீடு கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையினால் அங்கீகரிக்கப்பட்டது

23

சொஃப்ட்லொஜிக் ஃபைனான்ஸ் பீஎல்சீ அதன் ரூ .1.9 பில்லியன் உரிமைகள் வெளியீட்டுக்கான கொழும்பு பங்குச் சந்தை (CSE) அங்கீகாரத்தைப் பெற்றது, மேலும் நிறுவனத்தின் அதிவிசேட பொதுக் கூட்டம் 2020 நவம்பர் 9 ஆம் திகதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி தொகை நவம்பர் இறுதிக்குள் நிறுவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த உரிமைகள் வெளியீடு அதன் பெற்றோர் நிறுவனமான சொஃப்ட்லொஜிக் கெபிடல் பீஎல்சீ இனால் முற்றாக உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகும்.

அபான்ஸ் ஃபைனான்ஸ் பீஎல்சீ இன் பங்குகளை வாங்குவதையும் அறிவித்துள்ள சொஃப்ட்லொஜிக் குழுமம், அதன் பின்னர் அபான்ஸ் ஃபைனான்ஸ் பீஎல்சீ சொஃப்ட்லொஜிக் ஃபைனான்ஸ் பீஎல்சீ உடன் இணைக்கப்படும் என்றும் தெரிவித்தது. இந்த பரிவர்த்தனை தற்போது இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரத்திற்காக நிருவையில் உள்ளது. இவ்வாறு ஒருங்கிணையும் நிறுவனம் ரூ .32 பில்லியன் சொத்துக்கள், ரூ. 22 பில்லியன் வாடிக்கையாளர் வைப்புக்கள் மற்றும் ரூ .26 பில்லியன் வாடிக்கையாளர் முன்கட்டணங்கள் கொண்ட ஒரு வலுவான பாரிய நிறுவனமாக உருவெடுக்கும். அதே நேரம், இது மூலமாக சொஃப்ட்லொஜிக் ஃபைனான்ஸ் பீஎல்சீ நிறுவனம் இலங்கை மத்திய வங்கியின் மூலதன தேவை உப்பட அனைத்து ஒழுங்குமுறை தேவைகளுக்கும் இணங்குகிறது. ஒருங்கிணைந்த நிறுவனத்தின் மூலதன நிலை 2021 மார்ச் 31 திகதி ஆகும் பொது ரூ .4.9 பில்லியனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே சொஃப்ட்லொஜிக் ஃபைனான்ஸ், இந்த ஆண்டின் மே மாதம் முதல் நடைமுறையில் இருக்கும் நிறுவனத்தின் புதிய நிர்வாகக் குழுவால் டிஜிட்டல்மயமாக்கலால் மேம்படுத்தப்பட்ட ஒரு வலுவான வணிக மூலோபாயத்தை வழங்கப்படும் அதன் எதிர்கால வாய்ப்புகளைப் பற்றி உற்சாகமாக உள்ளது. நிறுவனத்தின் இணையற்ற வாடிக்கையாளர் வசதிகள் மற்றும் வணிகத்தை எளிதாக்குவது, சொஃப்ட்லொஜிக் குழுமத்தின் பரந்த வாடிக்கையாளர் தளத்திற்குள் ஒத்துழைப்பைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, நாட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்பீட்டாளராக, 12% ஆன தொழில்துறை வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது 30% ஐந்தாண்டு வளர்ச்சியை பெற்றுக்கொண்ட அதன் சகோதர நிறுவனமான சொஃப்ட்லொஜிக் லைஃப் இன்சூரன்ஸ் பீஎல்சீ வழங்கிய மகத்தான வெற்றியைப் பின்தொடரும்.

சொஃப்ட்லொஜிக் குழுமம் நீண்டகாலமாக நிதிச் சேவைகளை வளர்ச்சிக்கான கணிசமான வாய்ப்புகளைக் கொண்ட ஒரு தொழிலாகக் கருதியுள்ளது. இந்த முன்மொழியப்பட்ட இணைப்பு, சொஃப்ட்லொஜிக் ஃபைனான்ஸை வங்கி அல்லாத நிதி நிறுவன துறையில், அதிலும் குறிப்பாக நிறுவனத்தின் மூலோபாய கவனம் செலுத்தப்படும் லீசிங் பிரிவில், அதன் கால்தடத்தை அதிகரிபதில் உதவுகின்றது.

நிறுவனம் தற்போது அதன் தயாரிப்பு கலவை மற்றும் சேவை வழங்கலை மறு மதிப்பீடு செய்து வருகிறது, மேலும் டிஜிட்டல் சூழலுக்கு ஏற்றவாறு அதன் அமைப்புகள் மற்றும் செயல்முறைகளை நெறிப்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இது, தொடர்ந்து மாறிவரும் வெளிப்புற சந்தை நிலப்பரப்பை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும், அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தனித்துவமான மற்றும் எளிதில் அணுகக்கூடிய மதிப்பு முன்மொழிவை நிலையான முறையில் வழங்கவும் நிறுவனத்தைத் தயார்படுத்தும்.

சொஃப்ட்லொஜிக் குழுமம் இலங்கையின் மிகவும் ஆற்றல்மிக்க மற்றும் முற்போக்கான நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. முக்கிய வணிக துறைகளில் தலைமை தாங்கும் நிறுவனம், தகவல் தொடர்பு தொழினுட்பம், சுகாதாரம், சில்லறை வர்த்தகம், நிதி சேவைகள், வாகனங்கள் மற்றும் ஓய்வு என்ற துறைகளில் கால்தடம் பதித்துள்ளது. சொஃப்ட்லொஜிக் ஃபைனான்ஸ் பீஎல்சீ ஆனது 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதித் தொழில் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியுடன் பதிவுசெய்யப்பட்ட நிதி நிறுவனமாகும், மேலும் 2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க குத்தகை நிதிச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியால் உரிமம் பெற்ற ஒரு சிறப்பு குத்தகை நிறுவனமும் ஆகும்.