Take a fresh look at your lifestyle.

கிரடிட் கார்ட் e கூற்றுக்களுக்காக சுய பதிவை அறிமுகம் செய்துள்ள கொமர்ஷல் வங்கி

15

கொமர்ஷல் வங்கி கிரடிட் கார்ட் வைத்திருப்போர் தமது மாதாந்த வங்கிக் கூற்றை தபால் மூலம் பெறும் வரையில் காத்திருக்காமல் இலத்திரனியல் வழியாகப் பெற்றுக் கொள்ள வங்கியின் இணையத் தளத்துக்கு விஜயம் செய்து சுயமாகப் பதிவு செய்து கொள்ள முடியும் என்று வங்கி அறிவித்துள்ளது.

வங்கியின் கிரடிட் கார்ட் வைத்திருப்பவர்களில் சுமார் 45% ஏற்கனவே இலத்திரனியல் கூற்றைப் பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்தப் புதிய ந பதிவு அறிமுகத்தின் மூலம் இந்தப் பிரிவு மேலும் விரிவடையும் என்று வங்கி நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

e கூற்றுக்கான கணிசமான மாற்றம் கார்ட் பாவனையாளர்களுக்கான வசதிகளை அதிகரிக்கும் அதேவேளை, வங்கி கடதாசிப் பாவனையைக் குறைத்துக் கொள்ளவும் மேலும் வழிவகுக்கும். அது மட்டுமன்றி வங்கி மேற்கொண்டு வரும் சுற்றாடலுக்கு இசைவான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு வாடிக்கையாளர்கள் மேலும் பங்களிப்புச் செய்யவும் இது வழியமைக்கும் என்று வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

இந்த சுய பதிவு வசதியைப் பெற்றுக் கொள்ள தற்போதைய கொமர்ஷல் வங்கி கிரடிட் கார்ட் வாடிக்கையாளர்கள் வங்கியின் இணையத்தளத்துக்கு விஜயம் செய்தால் மட்டும் போதுமானதாகும். அதில் சுய பதிவு பிரிவில் சென்று ‘e statement only’ என்ற தெரிவை மேற்கொண்டால் போதுமானதாகும். இந்தப் பதிவு செயற்பாட்டை வெற்றிகரமாக முடித்துக் கொள்கின்றவர்களுக்கு இது பற்றி மின்அஞ்சல் வழியாக அறிவிக்கப்படும். அதன் பிறகு அவர்களது அடுத்த பட்டியல் காலத் திகதி முதல் அவர்களுக்கான e கூற்று அனுப்பி வைக்கப்படும். இந்த பதிவுச் செயற்பாடு அதற்குரிய தரவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் OTP (One time password) மூலம் பாதுகாக்கப்படும். அந்த வகையில் இந்த வசதியைப் பெற்றுக் கொள்ள கார்ட் உரிமையாளர்கள் எந்தவொரு வங்கிக் கிளைக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

e கூற்றுக்கு மாறுவதானது வாடிக்கையாளர் தமது கூற்றுக்களை காலதாமதம் இன்றி பெற்றுக் கொள்ள வழியமைக்கின்றது. கையேடுகளின் செயற்பாட்டை கணிசமாகக் குறைக்கின்றது. அச்சுக் கூற்றுக்கான வேலைகள் மற்றும் தபால் இடுதல் என்பனவற்றையும் இல்லாமல் ஆக்குகின்றது. வாடிக்கையாளர்கள் தங்களது கையடக்க கருவியின் துணையோடு எந்த இடத்தில் இருந்தும் எந்த நேரத்திலும் இந்த சேவையை செயற்படுத்திக் கொள்ள முடியும். இது வாடிக்கையாளருக்கு மேலும் வசதியாக அமைகின்றது.

உலகின் ஆயிரம் தலைசிறந்த வங்கிகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி தொடர்ந்து பத்து வருடங்களாக அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இவ்வாண்டு வங்கி அதன் 100 வது அண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. 2019ல் 50க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் விருதுகளை வென்றுள்ள கொமர்ஷல் வங்கி இலங்கையில் 268 கிளைகளுடனும் 875 ATM வலையமைப்புடனும் செயற்படுகின்றது.

கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டதாகவும், மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும், நேய்பியுடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது.