Take a fresh look at your lifestyle.

மூங்கில் குச்சிகளை இறக்குமதி செய்ய தீர்மானம்

41

ஊதுபத்தித் தயாரிப்புக்களுக்கான மூலப்பொருட்களாகப் பயன்படுத்தப்படும் விசேட மூங்கில் குச்சிகள் வழங்கல் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அமைச்சரவை நடவடிக்கை எடுத்துள்ளது.

கைத்தொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திரம் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஊதுபத்தித் தயாரிப்புக்களுக்கான மூலப்பொருட்களாகப் பயன்படுத்தப்படும் விசேட மூங்கில் குச்சிகள் தரத்துடன் கூடியதும் தேவையானளவு உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் வரை, உற்பத்திக்குத் தேவையான விசேட மூங்கில் குச்சிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் மூங்கில் குச்சிகளுக்கு வரிச்சலுகை வழங்கப்படவுள்ளது.

அத்துடன், குறித்த விசேட மூங்கில் தாவரம் இருக்கும் பிரதேசங்களை அடையாளம் காணல் மற்றும் குறித்த மூங்கில் தாவரத்தை வளர்க்கக் கூடிய இடங்களை இனங்கண்டு வளர்த்தல், வனப்பாதுகாப்புத் திணைக்களம், கமநல அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகாரசபையால் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.