Take a fresh look at your lifestyle.

HNB,வங்கி தமது ஹப்புத்தளை வாடிக்கையாளர் நிலையத்தை புதிய கட்டடத்திற்கு இடமாற்றமடைந்துள்ளது.

34

அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு அமைய எளிமையான மற்றும் பிரதேச வர்த்தகர்களுக்கு மிகச் சிறந்த வங்கிச் சேவைகளை வழங்கும் நோக்கில் இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB, தமது ஹப்புத்தளை வாடிக்கையாளர் நிலையத்தை இலக்கம் 14, பதுளை வீதி, ஹப்புத்தளை என்ற விலாசத்தில் மிகவும் இடவசதியுடன் கூடிய புதிய கட்டடத்திற்கு அண்மையில் இடமாற்றமடைந்துள்ளது.

ஹப்புத்தளை நகரம் மற்றும் அதனை அண்டிய வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவைகள் குறித்து புதிய அத்தியாயத்தின் அறிகுறியாக்கும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட இந்த நவீன வாடிக்கையாளர் நிலையம் வார நாட்களில் ஒவ்வொரு நாளிலும் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை வர்த்தக செயற்பாடுகளுக்காக திறந்திருக்கும். இடவசதியுடன் கூடிய புதிய சூழலில் அனைத்து விதமான வங்கி வசதிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

புதிய வாடிக்கையாளர் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்விற்கு HNBஇன் வலையமைப்பின் முகாமைத்துவம் தொடர்பான பிரதி பொது முகாமையாளர், வினோத் பெர்னாந்தோ விருந்தினராகவும் கலந்து கொண்டதோடு, ஹப்புத்தளை நகரசபை மேயர், சம்பத் லமாஹேமா ஆகியோர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

புதிய வாடிக்கையாளர் நிலையத்தை திறந்து வைத்த HNBஇன் வலையமைப்பின் முகாமைத்துவம் தொடர்பான பிரதி பொது முகாமையாளர், வினோத் பெர்னாந்து, பிரதேசத்தின் வர்த்தக மற்றும் வாடிக்கையாளர்களுடன் வங்கி கட்டியெழுப்பியுள்ள விசேட தொடர்புகள் குறித்து தெளிவுபடுத்தினார். ஹப்புத்தளை நகர் மற்றும் அதனை அண்டியுள்ள வாடிக்கையாளர்கள், மைக்ரோ நிதி மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வாடிக்கையாளர்களின் தேவைகளை வழங்குவதற்காக இந்த அதிநவீன வசதிகள் மிகவும் பயனாக இருக்கும். இந்த வசதிகளின் மூலம் வங்கி மற்றும் நிதி சேவைகளுக்காக இலகுவான நம்பிக்கையான மற்றும் இலகுவான நுழைவை எதிர்பார்க்கும் அனைவருக்கும் உச்ச அளவில் சேவைகளை வழங்குவதற்கு எமக்கு சந்தர்ப்பம் கிட்டும். வர்த்தகங்களுடன் உள்ள எமது தொடர்புகளை பலப்படுத்தும் வகையில் அதனை மென்மேலும் மேம்படுத்துவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். என அவர் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றுநோய் காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியைக் காட்டிய HNB Payfast, HNB MOMO, HNB Solo, HNB AppiGo போன்ற டிஜிட்டல் தளங்கள் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் வசதிகளுடன் கூடிய கட்டணம் செலுத்தும் தளத்தின் ஊடாக HNB பிரதேசங்களுக்குள் தமது வங்கிச் சேவைகளை பலப்படுத்தி முன்னேரிவரும் வர்த்தக சமூகத்தினருக்கு வசதிகளை டிஜிட்டலாக மேம்படுத்தியுள்ள வங்கிச் சேவைகளை வழங்குகிறது.