Take a fresh look at your lifestyle.

LANKAQR ஊடாக QR கொடுப்பனவுகளை Findmyfare ஏற்றுக்கொள்ளப் பலமளிக்கிறது கொமர்ஷல் வங்கி

75

இலங்கையின் மிகப்பெரிய இணையப் பயண நிறுவனமான Findmyfare-க்கு LANKAQR முறையை கொமர்ஷல் வங்கி அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து QR குறியீடுகள் மூலமாக இணையக் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ள அந்நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

விமானப் பயணச்சீட்டுக்கள் திரைப்பட அனுமதிச்சீட்டுக்கள் ஹொட்டல்களில் தங்குதல் அலைபேசி ரீலோட்கள் ஆகியவற்றை Findmyfare.com ஊடாகப் பெற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்கள் தற்போது தமக்கான கொடுப்பனவுகளை LANKAQR-இன் கீழான இலங்கையின் முதலாவது QR அடிப்படையிலான செயலியான ComBank Q+ செயலி ஊடாகச் செலுத்த முடியும்.

QR கொடுப்பனவு வசதியானது விஸா மாஸ்டர்கார்ட் நேரடியான வங்கிப் பரிமாற்றம் போன்ற தெரிவுகளுடன் இணைந்ததாக மற்றொரு கொடுப்பனவு வசதியாகக் காணப்படுகின்றது. எனவே இவ்விணையத்தளமானது பல்வேறு வழிகளில் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

ComBank Q+ செயலியானது தேசிய QR நியமத்தில் உள்நாட்டுப் பணக் கொடுப்பனவுகளுக்காக இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டலின் கீழ் LankaPay நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட LANKAQR – இன் கீழ் உருவாக்கப்பட்ட முதலாவது QR அடிப்படையிலான கொடுப்பனவு வசதியாகும்.

ComBank Q+ செயலியானது LANKAQR நியமத்தின் கீழான எந்தவொரு QR அடிப்படையிலான செயலி மூலமாகவும் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ளும் வசதியை வணிகர்களுக்கு வழங்குகிறது. வணிக நிறுவனத்தின் QR குறியீட்டை வாடிக்கையாளர்கள் தமது அலைபேசி மூலமாக ஸ்கேன் செய்து தமது கடனட்டை டெபிட் கார்ட் நடப்புக் கணக்கு அல்லது சேமிப்புக் கணக்கைத் தெரிவுசெய்து குறித்த கொள்வனவுக்கான கொடுப்பனவை மேற்கொள்ள வழிவகுக்கிறது. பல்வேறு வகைப் பிரிவிலான கொள்வனவுகளையும் விற்பனையையும் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களும் வணிகர்களும் LANKAQR மூலமாகக் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் நியமங்களின் அடிப்படையில் இச்செயலி விருத்தி செய்யப்பட்டுள்ளது.

பணப்பரிமாற்றத்தைச் சரிபார்த்தலும் உறுதிப்படுத்தலும் நிலையானதும் இயங்கியலானதுமான QR குறியீடுகளை ஏற்றுக்கொள்ளல் நிகழ்நேரத்தில் குறுஞ்செய்திகள் அல்லது செயலி மூலமான அறிவிப்புகள் மூலமாகத் தகவல் வழங்கல் வணிகர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சௌகரியத்தை வழங்கும் வகையில் நிகழ்நேரத்தில் வணிகரின் கணக்குக்குப் பணம் சேருதல் கூற்றுக்களிலும் கட்டணப் பட்டியல்களிலுமென QR குறியீடுகள் அச்சடித்த வகையில் கோரப்படும் வேளைகளிலும் கட்டமைப்பு ஒருங்கிணைப்பிலும் இயங்கியல் QR என ComBank Q+ செயலி பல்வேறு தனித்துவமான வசதிகளை வழங்குகிறது.

Findmyfare இணையத்தளத்துடன் QR குறியீடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளமையானது தற்செயலான கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் ஆபத்தின்றி இத்தளத்தில் சௌகரியமானதும் பாதுகாப்பானதுமான கொள்வனவுகளை மேற்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு வழிவகுக்கும் என வங்கி தெரிவித்தது. வணிக நிலையத்தின் QR குறியீட்டை வாடிக்கையாளர் ஸ்கேன் செய்வதன் மூலமாக கொடுப்பனவு நடைமுறையை அவரே ஆரம்பிப்பதாலும் குறித்த கொடுப்பனவுக்கான தொகை அவரது கணக்கிலிருந்து பெறப்படுவதற்கு முன்னதாக வாடிக்கையாளர் அதை உறுதிப்படுத்தி அதற்கான அனுமதியை வழங்க வேண்டியிருப்பதாலும் QR கொடுப்பனவுகள் பாதுகாப்பானவையாகும்.

QR கொடுப்பனவு வசதிக்கு மேலதிகமாக Findmyfare இணையத்தளத்துக்கான இணையக் கொடுப்பனவு நுழைவாயில் சேவையும் கொமர்ஷல் வங்கியால் வழங்கப்படுகிறது. கடனட்டை டெபிட் கார்ட்கள் ஆகியவற்றை அனுமதித்து விஸா மாஸ்டர்கார்ட் யூனியன்பே வகையிலான கார்ட்கள் மூலமாக நேரடிக் கொடுப்பனவுகளைச் செயற்படுத்துவதற்காக இணைய கார்ட் கொடுப்பனவுகளை ஏற்பதற்கு இது வழிவகுக்கும்.

www.Findmyfare.com இணையத்தளத்துக்கான இணையக் கொடுப்பனவு வசதி மாஸ்டர்கார்ட் கொடுப்பனவு நுழைவாயில் சேவைகள் (Mastercard Payment Gateway Services – MPGS) மூலமாக வங்கியால் வழங்கப்படுகிறது. கொடுப்பனவு அட்டைத் தொழிற்றுறைத் தரவுப் பாதுகாப்பு நியமத்துக்கு (Payment Card Industry Data Security Standard – PCI-DSS) முற்றிலும் ஏற்புடையதாக இச்சேவை அமைந்துள்ளது. வணிக நிறுவனங்களுக்கு வழங்கிகளில் நிறுவப்;பட்ட பக்கங்கள் (server-hosted pages) வழங்கப்படுவதன் காரணமாக கார்ட் விவரங்கள் வணிக நிறுவனத்தினாலன்றி கொடுப்பனவு வழங்கியில் பாதுகாப்பாகக் கையாளப்படுவதால் இது பாதுகாப்பான இலத்திரனியல் வர்த்தகத் தீர்வாக அமைகிறது.

2012 இல் நிறுவப்பட்டமை தொடக்கம் Findmyfare.com நிறுவனமானது இலங்கையின் மிகப்பெரிய இணையப் பயண நிறுவனமாகத் திகழ்வதோடு சிறந்த பயண வசதிகளையும் வழங்குகிறது. உலகம் முழுவதற்குமான மலிவான விமான சேவைகளையும் ஹொட்டல்களையும் தேடி ஒப்பிடும் வசதியை இந்த இணையத்தளம் வழங்குகிறது. கடனட்டைக் கொடுப்பனவின்றி முற்பதிவுகளை மேற்கொள்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு வசதியை வழங்கிய இலங்கையின் முதலாவது இணைய முற்பதிவு வசதியை இந்நிறுவனமே வழங்கியிருந்தது. வாடிக்கையாளர்களுக்குத் துரிதமானதும் இலகுவானதும் நம்பகத்தகுந்ததுமான பயண முற்பதிவுகளைப் புதிய வழியில் வழங்கி இலங்கையின் பயணத் தொழிற்றுறையில் Findmyfare.com நிறுவனம் தனித்துவமான பெயரொன்றைப் பெற்றுள்ளது.

உலகின் ஆயிரம் தலைசிறந்த வங்கிகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி தொடர்ந்து பத்து வருடங்களாக அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இவ்வாண்டு வங்கி அதன் 100 வது அண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. 2019ல் 50க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் விருதுகளை வென்றுள்ள கொமர்ஷல் வங்கி இலங்கையில் 268 கிளைகளுடனும் 873 ATM வலையமைப்புடனும் செயற்படுகின்றது.

கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டதாகவும் மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் நேய்பியுடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது.