Take a fresh look at your lifestyle.

30 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை வாடிக்கையாளர்களுக்கு வெகுமதியாக வாரி வழங்கவுள்ள செலிங்கோ லைஃப் குடும்ப சவாரி

35

செலிங்கோ லைஃப் நிறுவனம் தனது விசுவாசம் மிக்க வாடிக்கையாளர்களுக்கு 30 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை மழையாகப் பொழியவுள்ளது. கொவிட்-19 பிரச்சினை காரணமாக ஏற்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளைக் கருத்திற் கொண்டு அதன் வழமையான குடும்ப சவாரி ஊக்குவிப்புக்கு மாற்றீடாக இந்த திகைப்பை அளிக்கவுள்ளது.

இலங்கை ஆயுள் காப்புறுதியில் சந்தைத் தலைவர்கள் விடுத்துள்ள அறிவிப்பானது செப்டம்பர் 2020 க்கும் ஆகஸ்ட் 2021 க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் தமது ஆயுள் காப்புறுதி அல்லது ஓய்வூதியக் கணக்கை செயற்படு நிலையில் வைத்திருப்பவர்கள் மத்தியில் இருந்து 600 க்கும் மேற்பட்டவர்கள் தெரிவு செய்யப்பட்டு இந்தத் தங்கத்தை வெல்லும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வழமையாக வழங்கப்படும் வெளிநாட்டுப் பயணம் மற்றும் உள்நாட்டு சுற்றுப் பயணம் என்பனவற்றுக்கு பதிலாகவே தங்க வெகுமதி வழங்கப்படவுள்ளது.

இந்த நோய்ப்பரவல் மனித வாழ்வின் பல்வேறு பிரிவுகளில் ஏற்படுத்தி உள்ள இருளை நீக்கும் வகையில் இந்த ஊக்குவிப்பு காலப்பகுதியில் இரு மாதங்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் ஆறு அதிர்ஷ்ட சீட்டிழுப்புக்களை நடத்த உள்ளது. இதில் இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை ஒரு பாரிய வெற்றியாளருக்கு ஒரு மில்லியன் பெறுமதியான தங்கமும் ஏனைய 99 பேர் மத்தியில் நாலு மில்லியன் பெறுமதியான தங்கமும் பகிரப்படவுள்ளது.

´விசுவாசமுள்ள வாடிக்கையாளர்கள் வர்த்தகத்தை உயிர்த் துடிப்போடு வைத்துள்ளனர். அதை உரிய விதத்தில் நாம் அங்கிகரிக்க வேண்டும். இன்றைய நிலைபோன்ற இக்கட்டான நிலையில் நாம் அதற்கு பொருத்தமான வெகுமதியையும் வழங்க வேண்டும்´ என்று கூறினார் செலிங்கோ லைஃப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் துஷார ரணசிங்க. எனவே தான் உலகேங்கும் ஏற்பட்டுள்ள நோய்ப்பரவலுக்கு மத்தியிலும் நாம் எமது வாடிக்கையாளர்களுக்கு தங்கத்தை வெகுமதியாக வழங்கத் தீர்மானித்துள்ளோம். தங்கம் என்பது உலகளாவிய ரீதியில் சுபிட்சத்துக்கும் பெறுமதிக்கும் உரிய அடையாளமாகும் என்று அவர் மேலும் விளக்கினார்.

´இலங்கையில் வாடிக்கையாளர் ஊக்குவிப்பில் செலிங்கோ லைஃப்பின் குடும்ப சவாரி ஏற்கனவே உச்சத்தைத் தொட்டுள்ளது. வாடிக்கையாளருக்கு வெகுமதிகளை வழங்குவதில் நாம் மீண்டும் ஒரு புதிய முன்னுதாரணத்தை குடும்ப சவாரியின் 14 வது அத்தியாயத்தின் மூலம் ஸ்தாபித்துள்ளோம்´ என்று ரணசிங்க தொடர்ந்து விளக்கம் அளித்தார்.

குடும்ப சவாரி 14 இன் ஆறு சீட்டிழுப்புக்களிலும் பங்கேற்கும் வாய்ப்பை பெற காப்புறுதிதாரர்கள் செலிங்கோ லைஃப்புடன் உள்ள தமது காப்புறுதியை தொடர்ந்து பேண வேண்டும் அல்லது தமது ஓய்வூதியக் கணக்கில் குறிப்பிட்ட தொகை குறைந்த பட்ச மீதியைப் பேணி வர வேண்டும். கம்பனிக்கு நேரடியாக தமது கட்டு பணத்தை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மேலதிக பரிசு வெல்லும் வாய்ப்பு கிடைக்கும். செலிங்கோ லைஃப்பின் வாடிக்கையாளர்களாக அவர்கள் இருக்கும் கால அளவின் அடிப்படையில் இது தீர்மாணிக்கப்படும் என்று கம்பனி அறிவித்துள்ளது. இந்த ஊக்குவிப்புக் காலப்பகுதியில் புதிதாக ஆயுள் காப்புறுதிக் கொள்கைகளைப் பெற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர்கள் குறைந்த பட்சம் மூன்று மாத கால கட்டுப்பணத்தை செலுத்தி உள்ள நிலையில் அவர்களுக்கும் இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் சந்தர்ப்பம் கிட்டும்.

ஆயுள் காப்புறுதியில் வாடிக்கையாளர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் அவர்கள் தமது காப்புறுதிக் கொள்கைகளை செயற்படு நிலையில் வைத்திருக்குமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். அத்தோடு குடும்பப் அலகின் ஒற்றுமை மற்றும் குடும்பத்தினர் ஒன்றாக சேர்ந்திருக்கும் நேரத்தின் முக்கியதுவம் என்பனவற்றையும் ஊக்குவிக்கும் வகையில் குடும்ப சவாரி திட்டத்தின் மூலம் கடந்த 12 வருட காலப்பகுதியில் 26000 த்துக்கும் மேற்பட்ட மக்கள் நன்மை அடைந்துள்ளனர். இதற்கு முந்திய குடும்ப சவாரி திட்டத்தில் பாரிய பரிசுகளை வென்ற குடும்பத்தவர்கள் அவுஸ்திரேலியா, இத்தாலி, இங்கிலாந்து, ஜெர்மனி, சுவிட்ஸர்லாந்து, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளனர். ஏனைய வெற்றியாளர்கள் சீனா, துபாய், சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

செலிங்கோ லைஃப் குடும்பசவாரியின் ஊக்குவிப்பில் நான்கு பிரபலங்கள் பங்கேற்கின்றனர். நடிகர் சிறியன்த மெண்டிஸ், சஞ்சீவனி வீரசிங்க, றொஷான் றனவன அவரின் மனைவி குஷ்லானி ஆகியோர் வாடிக்கையாளர்களுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்களில் பங்கேற்பர்.

செலிங்கோ லைஃப் தனது கடந்த 32 வருடகால செயற்பாட்டில் பிந்திய அரைப் பகுதியில் ஆயுள் காப்புறுதிப் பிரிவில் தலைமை தாங்கும் நிறுவனமாகவும் திகழ்கின்றது. இலங்கையில் வேலை செய்வதற்கு மிகச் சிறந்த இடம் என்று Great Place to Work®, பிரிவால் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் மிகவும் பெறுமதி மிக்க ஆயுள் காப்புறுதி வர்த்தக முத்திரையாக பிறேண்ட் பினான்ஸால் இவ்வாண்டு தெரிவு செய்யப்பட்டுள்ள செலிங்கோ லைஃப் 2020 SLIM-NEILSEN மக்கள் விருதுகளின் போது தொடர்ந்து 14 வது தடவையாக ´ஆண்டின் மக்கள் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குனர்´ என்ற விருதையும் வென்றுள்ளது. 2019 ன் ICCSL விருதுகளின் போது நாட்டின் ´மிகவும் கவர்ச்சிகரமான பத்துக் கம்பனிகள்´ வரிசையிலும் அது இடம் பிடித்துள்ளது. அதே ஆண்டில் வேர்ள்ட் பினான்ஸால் தொடர்ந்து ஆறாவது வருடமாக நாட்டின் மிகச் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனம் என்ற விருதையும் அது வென்றது. அத்தோடு பிஸ்னஸ் டுடேயின் தர வரிசையில் நாட்டின் முன்னணி 30 கம்பனிகள் வரிசையில் ஆறாவது இடத்தையும் அது தனதாக்கிக் கொண்டது.

செலிங்கோ லைஃப் செயற்படு நிலையில் உள்ள சுமார் பத்து லட்சம் காப்புறுதிக் கொள்கைகளால் பாதுகாக்கப்படும் உயிர்களோடு மிக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளது. செலிங்கோ லைஃப் உள்ளுர் ஆயுள் காப்புறுதித் துறையில் புதிய கண்டுபிடிப்புகள், அபிவிருத்தி, வாடிக்கையாளர் சேவை, தொழிற்சார் அபிவிருத்தி, கூட்டாண்மை சமூகப் பொறுப்பு என்பனவற்றுக்கும் புகழ்பூத்த நிறுவனமாகும்.