Take a fresh look at your lifestyle.

இரு சக்கர டயர் உற்பத்தியை 3 மாதங்களில் 85 சதவீதத்தால் அதிகரித்தது சியெட்

199

மூன்று மாதகாலப் பகுதியில் இரு சக்கர வாகனங்களுக்கான டயர்களுக்கான உற்பத்தியை 85 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக சியெட் களனி ஹோல்டிங்ஸ் அறிவித்துள்ளது. அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தற்காலிக இறக்குமதிக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து உள்நாட்டுச் சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பதில் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.

களனியிலும் களுத்துறையிலும் அமைந்துள்ள அதனது உற்பத்தி ஆலைகளின் முழுமையான திறனைப் பயன்படுத்திய சியெட் நிறுவனம் மோட்டார் சைக்கிள்களுக்கும் ஸ்கூட்டர்களுக்குமாக ஜூன் 2020இல் ஒரு மாதத்தில் 27,000 டயர்களாக இருந்த தனது உற்பத்தியை ஜூலை ஓகஸ்ட் மாதங்களில் ஒரு மாதத்துக்கு 41,000 என மாற்றியதோடு செப்டெம்பரில் 50,000 டயர்களை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கிறது. இதன்மூலமாக உற்பத்தியை ஆரம்பத்தில் 52 சதவீதத்தால் உயர்த்தியிருந்த சியெட் பின்னர் 22 சதவீதத்தால் அதிகரிக்கவுள்ளது.

இரு சக்கர வாகனப் பிரிவில் ஏற்படுத்தப்பட்டுள்ள சடுதியான இந்த அதிகரிப்பு சியெட் களனி நிறுவனத்தால் ஏற்கெனவே ட்ரக் பஸ் டயர்களுக்கும் பயணிகள் கார் ரேடியல்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருந்த உற்பத்தி அதிகரிப்பைப் பின்பற்றியதாக அமைந்துள்ளது. இந்த அதிகரிப்புக்களுக்கு முன்னதாக இலங்கையின் காற்றடைத்த டயர் உற்பத்திக் கேள்வியில் அரைவாசியை சியெட் களனி நிறுவனம் பூர்த்தி செய்து வந்தது. இரு சக்கர வாகனங்களுக்கான டயர் உற்பத்தியை அதிகரிப்பதற்காக களுத்துறையில் அமைந்துள்ள முச்சக்கர டயர் உற்பத்தி ஆலையில் காணப்பட்ட வசதியைப் பயன்படுத்தியதாக அந்நிறுவனம் குறிப்பிட்டது.

சியெட் களனி நிறுவனம் தற்போது 32 வகையான ஸ்கூட்டர் மோட்டார்சைக்கிள் டயர்களை 43 வௌவேறான அளவுகளில் தயாரிப்பதோடு இரு சக்கர வாகன டயர்களுக்கான உள்நாட்டுச் சந்தைத் தேவையில் 37 சதவீதமானவற்றைப் பூர்த்தி செய்தது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சியெட் களனி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. ரவி டட்லானி உள்நாட்டுத் தொழிற்றுறைகள் எவ்வளவுக்குத் திறனைக் கொண்டிருக்கின்றன என்பதைக் காட்டுவதற்கான சவாலை இந்த இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விடுக்கின்றன. அத்தோடு அதிகரித்த உள்நாட்டு உற்பத்தி மூலமாக இறக்குமதிப் பதிலீட்டை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முன்னெடுப்புக்கு ஆதரவை வழங்குவதற்காக எம்மிடம் காணப்படும் முழுமையான திறனைப் பயன்படுத்த நாம் முயல்கிறோம். மிகவும் பரபலமான வகை டயர்களுக்குக் காணப்படும் கேள்வியைப் பூர்த்திசெய்வதற்கான வழிகளை நாம் தொடர்ச்சியாகத் தேடுவதோடு எம்மால் உற்பத்தி செய்ய முடியாத வகை உற்பத்திகள் குறித்து அரசாங்கத்துக்கு அறிவிக்கிறோம். இதன்மூலமாக அவை இறக்குமதி செய்யப்பட முடியும் எனத் தெரிவித்தார்.

சியெட் நிறுவனத்தால் ட்ரக் பஸ் டயர்களின் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டதோடு இதன்மூலமாக இவ்வகைப் பிரிவில் காணப்படும் தேவையில் 100 சதவீதமானவற்றையும் நிறுவனம் உற்பத்தி செய்யக்கூடியதாக அமைந்ததோடு இதன்மூலமாக அந்நியச் செலாவணியில் 11 பில்லியன் ரூபாயை ஆண்டொன்றில் அரசாங்கம் சேமிக்க சியெட் வழியேற்படுத்தியிருந்தது. நிறுவனத்தால் இப்போது இரு சக்கர வாகன டயர்கள் தொடர்பாக நடைமுறைப்படுத்தப்படும் முன்னெடுப்புக் காரணமாக இறக்குமதிப் பதிலீடு மூலமாக ஆண்டொன்றில் 350 மில்லியன் ரூபாயை மேலதிகமாகச் சேமிக்க முடியுமென திரு. டட்லானி தெரிவித்தார்.

இந்தப் பிரிவு டயர்களின் உற்பத்திக் கொள்திறன் அதிகரித்தமை மூலமாக Honda Dio, Yamaha Ray ZR, Honda Grazia, TVS Wego, Suzuki Burgman போன்ற பிரபலமான ஸ்கூட்டர்களுக்கான 90/90-12 TL, 90/100-10 TL அளவுகளின் உற்பத்தியில் 100 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோன்று TVS Apache, Bajaj Pulsar 160 NF, Bajaj Pulsar 180 போன்ற மோட்டார்சைக்கிள் வகைகளுக்கான 90/90-17 TL அளவு டயர்களின் உற்பத்தி 400 சதவீதத்தால் அதிகரித்துள்ளதோடு பிரபலமான Yamaha FZ-க்கான 100 / 80-17 TL டயரின் உற்பத்தி 100 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. Bajaj Pulsar 150, Bajaj CT 100, Bajaj Platina, TVS Heavy Duty Super XL ஆகியனவற்றின் டயர் உற்பத்தியும் கணிசமாளவு அதிகரித்துள்ளதென நிறுவனம் தெரிவித்தது.

குறிப்பிடத்தக்கதாக டிசெம்பர் 2019 இலிருந்து இன்று வரை டயர்களின் விலைகளில் சியெட் களனி நிறுவனம் மாற்றத்தை ஏற்படுத்தப்படவில்லை. கொள்திறனை அதிகரிப்பதற்கான மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் அதேபோன்று கேள்வி அதிகரிப்புக் காரணமாகச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு மத்தியிலும் வாடிக்கையாளர்களுக்கும் பொருளாதாரத்துக்கும் உதவும் வண்ணம் இம்முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

இந்தியா – இலங்கை இணைந்த பங்குடைமை நிறுவனங்களில் உற்பத்தித் துறையில் மிகவும் வெற்றிகரமானவற்றுள் ஒன்றாக சியெட் களனி ஹோல்டிங்ஸ் கருதப்படுகிறது. இந்த இணைந்த பங்குடைமை இதுவரை இலங்கையில் 8 பில்லியன் ரூபாய் முதலீட்டை மேற்கொண்டுள்ளது. இதனுள் உற்பத்தி அளவை அதிகரித்தல் தொழில்நுட்பத் தரமுயர்த்தல் புதிய உற்பத்தி அபிவிருத்தி ஆகியவற்றுக்காக 2018 ஆம் ஆண்டு ஜனவரியில் அர்ப்பணிக்கப்பட்ட 3 பில்லியன் ரூபாயும் உள்ளடங்குகிறது.

இலங்கையில் காணப்படும் நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள் மூலமாக றடிக்கல் (பயணிகள் கார்கள் வான்கள் எஸ்.யு.வி வாகனங்கள், வர்த்தக வகை (பயாஸ்-ப்ளை றடிக்கல்), மோட்டார் சைக்கிள் முச்சகரவண்டி விவசாய வாகனப் பிரிவுகள் ஆகியவற்றுக்கான காற்றடைத்த டயர்கள் உற்பத்திசெய்யப்படுகின்றன.