Take a fresh look at your lifestyle.

கொமர்ஷல் வங்கியின் ஒருங்கிணைக்கப்பட்ட மும்மொழி தொடர்பு நிலையம் ஆரம்பம்

76

கொமர்ஷல் வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் தங்கு தடையற்ற நாள்தோறும் 24 மணி நேர சேவையை மும்மொழிகளிலும் வழங்கக் கூடிய ஒருங்கிணைக்கப்பட்ட தொடர்பாடல் நிலையத்தை தொடங்கி உள்ளது. விசாரணைகள் மற்றும் உதவிகளுக்காக பல்வேறு தொடர்பாடல் வழிகள் ஊடாக வங்கியை அணுகக் கூடிய வசதியை இது சகலருக்கும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையத்தின் பின்னணியில் செயற்படும் அர்ப்பணம் மிக்க குழு வாடிக்கையாளர்களின் தொலைபேசி அழைப்புக்களை கையாளல் எழுத்து மூல தொடர்புகளில் கவனம் செலுத்தல் சமூக ஊடகங்கள் வழியாக அனுப்பப்படும் வாடிக்கையாளர்களின் கருத்துக்கள் மற்றும் வேண்டுகோள்களில் கவனம் செலுத்தல் சிறந்த கண்காணிப்புக்கான குழுத் தலைவர்கள் மற்றும் பயிலுனர்கள் வாடிக்கையாளர்கள் வங்கியுடனான ஒவ்வொரு தொடர்புகளின் போதும் சாதகமான அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதை உறுதி செய்தல் என பல்வேறு பிரிவுகளையும் நோக்கங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

இந்த ஒருங்கிணைக்கப்பட்ட தொடர்பு கொள்ளல் நிலையமானது பல்வேறு வழிகளின் ஊடாகவும் வங்கியோடு தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு தங்கு தடையற்ற சேவைகளை வழங்குவதற்கு மிகவும் அவசியமானதோர் மேடையாகும். அத்தோடு அவர்களுக்கு சமகாலத்தில் விரைவானதும் தொழிற்சார் தன்மை கொண்டதுமான பொறுப்பான பதில்களை வழங்குவதற்கும் மிகவும் அவசியமானதாகும் என்று வங்கி அறிவித்துள்ளது.

இந்த நிலையத்தின் ஆரம்பம் பற்றி கருத்து வெளியிட்ட கொமர்ஷல் வங்கியின் சந்தைப்படுத்தல் பிரதி பொது முகாமையாளர் ஹஸ்ரத் முனசிங்க ´வாடிக்கையாளர்களை மையப்படுத்திய ஒரு புதிய பரிணாமத்தின் தொடக்கமாக இந்த ஒருங்கிணைக்கப்பட்ட தொடர்பாடல் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதேவேளை இங்கு வரும் சகல விடயங்களும் தயவுடனும் ஆற்றலுடலும் அவதானிக்கப்படும். சேவைகளின் சிறப்பிடமாக இதனை ஸ்தாபித்துக் கொள்வதை நோக்காகக் கொண்டே இது செயற்படும்´ என்று கூறினார். சமூக இடைவெளி தொடுகையற்ற தொடர்புகள் என்பன மக்களின் சுகாதாரப் பாதுகாப்புக்கு அவசியமாகத் தேவைப்படும் இன்றைய நிலையில் இவ்வாறான நிலையத்தின் சேவைகள் மிகவும் பயன்மிக்கதாக அமையும் என்று அவர் மேலும் கூறினார்.

எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும் தமக்கு விருப்பமான எந்த மொழியிலும் கொமர்ஷல் வங்கி வாடிக்கையாளர்கள் இடையூறின்றி தமது சேவைகளைப் பெற்றுக் கொள்ள இந்த தொடர்பாடல் நிலையம் துணை நிற்கின்றது. வங்கி வழங்கிவரும் சேவைகளின் தரத்தை மேம்படுத்திக் கொள்ள வாடிக்கையாளர்களின் யோசனைகளைப் பெற்றுக் கொள்வதிலும் இந்த நிலையம் கவனம் செலுத்தும் என்று முனசிங்க மேலும் விளக்கமளித்தார்.

உலகின் ஆயிரம் தலைசிறந்த வங்கிகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி தொடர்ந்து பத்து வருடங்களாக அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இவ்வாண்டு வங்கி அதன் 100 வது அண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. 2019ல் 50க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் விருதுகளை வென்றுள்ள கொமர்ஷல் வங்கி இலங்கையில் 268 கிளைகளுடனும் 873 ATM வலையமைப்புடனும் செயற்படுகின்றது.

கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டதாகவும் மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் நேய்பியுடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது.