Take a fresh look at your lifestyle.

அமானா வங்கியின் பணிப்பாளர் சபைக்கு நான்கு பல்துறை அனுபவம் வாய்ந்த புதிய பணிப்பாளர்கள் நியமனம்

93
அமானா வங்கியின் பணிப்பாளர் சபையில் பல்துறை அனுபவம் வாய்ந்த நான்கு புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனுபவம் வாய்ந்த பட்டயக் கணக்காளர் திஷான் சுபசிங்கரூபவ் நிதித் தொழில்நுட்ப தொழில்முயற்சியாளர் ஒமர் காசிம் சட்டத்துறை நிபுணர் மொஹமட் ஆதமலி மற்றும் இஸ்லாமிய வங்கியியல் சட்ட நிபுணர் போல் மேர்சர் ஆகியோர் புதிய பணிப்பாளர் சபை அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வங்கியின் முன்னால் தலைவர் ஒஸ்மான் காசிம் இலங்கை மத்திய வங்கியினால் வர்த்தக வங்கியொன்றின் பணிப்பாளர் ஒருவருக்கு வரையறுக்கப்பட்ட அதிகபட்ச சேவைக்காலமான 9 வருடங்களை பூர்த்தி செய்ததினை அடுத்து தனது பதவியிலிருந்து ஒய்வு பெற்றார். இவரின் பணிப்புரையின் பெயரில் ஒமர் காசிம் பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஒஸ்மான் காசிம் அவர்கள் ஒய்வு பெற்ற போதிலும் வங்கியின் முதல் 10 பங்காளர்களில் ஒருவராக தொடர்ந்தும் அங்கம் வகிக்கின்றார். வங்கியின் பணிப்பாளராக 9 வருடங்கள் பணியாற்றியதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற சிரேஷ்ட பணிப்பாளரான ஜஸ்ரி மெக்டொன் இஸ்மைல் அவர்களுக்கு பதிலாக திஷான் சுபசிங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன் பணிப்பாளர் சபை நிறுவப்பட்ட காலம் முதல் அதன் அங்கத்தரவாக திகழ்ந்து 2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பதவி துறந்த ஹர்ஷ அமரசேகர PC அவர்களுக்கு பதிலாக சட்டத்துறை நிபுணர் மொஹமட் ஆதமலி நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்கியின் மூலோபாய பங்காளரான ICD இன் இரண்டாம் பிரேரிப்பு பணிப்பாளர் நிலையில் காணப்பட்ட வெற்றிடத்துக்கு இஸ்லாமிய வங்கியியல் சட்ட நிபுணர் போல் மேர்சர் நியமிக்கப்பட்டுள்ளார். திஷான் சுபசிங்க நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீன பணிப்பாளராக இயங்குவதுடன் ஒமர் காசிம் மொஹமட் ஆதமலி மற்றும் போல் மேர்சர் ஆகிய மூவரும் நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீனமற்ற பணிப்பாளர்களாக இயங்குவார்கள்.

புதிய பணிப்பாளர்கள் நியமனம் தொடர்பில் வங்கியின் தலைவர் அஸ்கி அக்பரலி கருத்துத் தெரிவிக்கையில் ´எமது பணிப்பாளர் சபையில் நான்கு பல்துறை அனுபவம் நிறைந்த நிபுணர்களான திஷான் சுபசிங்க ஒமர் காசிம்ரூபவ் மொஹமட் ஆதமலி மற்றும் போல் மேர்சர் ஆகியோரை நியமித்துள்ளதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். அவர்களின் திரண்ட அனுபவம் மற்றும் வியாபார உள்ளார்ந்த அறிவு போன்றன வங்கியை உயர்ந்த நிலையை நோக்கி வழிநடத்தி அதன் மூலோபாய இலக்குகளை எய்துவதற்கு வழிகாட்டுவதாக அமைந்திருக்கும்.´ என்றார்.

திஷான் ஹரேந்திரநாத் சுபசிங்க இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தின் (CA Sri Lanka) அங்கத்தவர் என்பதுடன் Moore Stephens Consulting (Private) Limited மற்றும் Moore Stephens Aiyar ஆகியவற்றின் முகாமைத்துவ பணிப்பாளரும் இணை முகாமைத்துவ பங்காளருமாவார். அதற்கு முன்னதாக அவர் BDO Partners இல் கணக்காய்வு மற்றும் உறுதிப்படுத்தல் தலைமை அதிகாரியாக செயலாற்றியிருந்தார். சணச பொதுக் காப்புறுதி நிறுவனத்தின் தலைவராக திகழ்வதுடன் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் நிறைவேற்று சபையின் அங்கத்தவராகவும் திகழ்கின்றார். நியுயோர்க் பிலடல்பியா சிக்காகோ மற்றும் பொட்ஸ்வானா ஆகிய நகரங்களில் PricewaterhouseCoopers Marketing & Corporate Communications Department Tel: 0775875997 (Ammar) (PwC) நிறுவனத்தில் ஏழு வருட காலம் பணியாற்றிய அனுபவத்தையும் கொண்டுள்ளார். இவற்றுக்கு மேலாக அமெரிக்கா ஹொங் கொங் பாங்கொக் ஹைதராபாத் மும்பை மலேசியா இந்தோனேசியா மற்றும் ரோம் ஆகிய பகுதிகளில் சர்வதேச பயிற்சிகளையும் பெற்றுள்ளார். இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தின் (CA Sri Lanka) அங்கத்தவர் எனும் வகையில் வருடாந்த ஆண்டறிக்கைகள் விருதுகள் வழங்கும் நிகழ்வின் நிர்வாக சபை தேசிய மாநாட்டு கழகம் மற்றும் பரீட்சைகள் கழகம் ஆகியவற்றின் தலைவராகவும் செயலாற்றியுள்ளார். இளம் பட்டய கணக்காளர் மாநாட்டின் உப தலைவராக இவர் இயங்கியுள்ளார்.

திஷான் சான்றளிக்கப்பட்ட தகவல் கட்டமைப்பு கணக்காய்வாளர் (CISA-USA) ஆவார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் நிதியியல் MBA பட்டத்தை தங்கப் பதக்கத்துடன் பெற்றுள்ளார். பக்கிங்ஹம்ஷயர் நியு பல்கலைக்கழகத்தில் LLB (Hons.) பட்டத்தையும் பெற்றுள்ளார். சில அரச பல்கலைக்கழகங்களில் பகுதி நேர விரிவுரையாளராக இவர் கடமையாற்றுவதுடன் மாலைதீவுகள் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளில் சர்வதேச பயிற்சிகளை முன்னெடுத்துள்ளார்.

ஒமர் காசிம், நிதியியல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பம் சார் தொழில்முனைவராக திகழ்கின்றார். இவர் தொழில்நுட்ப பங்காண்மைகளைக் கட்டியெழுப்புவதில் நிபுணத்துவம் கொண்டுள்ளார். லண்டனை தலைமையகமாகக் கொண்டியங்கும் உயர் வினைத்திறன் வாய்ந்த வியாபார வங்கியியல் கட்டமைப்பான Nomod இன் இணை ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் திகழ்கின்றார். உலகளாவிய ரீதியில் காணப்படும் மில்லியன் கணக்கான தொழில் முயற்சியாளர்கள் மற்றும் ஆரம்பநிலை வியாபாரங்களுக்கு தமது வியாபார நடவடிக்கைகளை மேம்படுத்திக் கொள்வதற்கு அவசியமான புத்தாக்கமான கொடுப்பனவு மற்றும் வங்கியியல் முறைமைகளை வழங்கும் நடவடிக்கைகளை இந்த நிறுவனம் முன்னெடுக்கின்றது. Esanjo எனும் வியாபார முதலீட்டு மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான துபாயை தளமாகக் கொண்டியங்கும் நிறுவனத்தின் இணை ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் செயலாற்றியிருந்ததுடன் தற்போது இந்நிறுவனத்தின் பணிப்பாளர் சபை அங்கத்தவராக திகழ்கின்றார். மத்திய கிழக்கு வட ஆபிரிக்கா மற்றும் தென் ஆசியா பிராந்தியங்களை உள்வாங்கி JadoPado எனும் E-வணிக தொழில்நுட்ப கட்டமைப்பை ஒமர் முன்னர் நிறுவியிருந்ததுடன் அதன் பொறுப்புகளிலிருந்து தாமாக விலகியிருந்தார். ஐக்கிய இராஜ்ஜியத்தின் வார்விக் பல்கலைக்கழகத்தின் இலத்திரனியல் பொறியியல் மற்றும் வியாபார கற்கைகளுக்கான BSc பட்டத்தை ஒமர் பெற்றுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த முன்னணி சட்ட நிபுணராக மொஹமட் ஆதமலி திகழ்கின்றார். வணிக சட்டம் ஊழியர் சட்டம் காப்புறுதிச் சட்டம் வங்கியியல் மற்றும் கடன் தொடர்பான சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். முதலீட்டு ஆலோசனை வியாபார நிறுவுகை / மீள் கட்டமைப்பு சேவைகள் மற்றும் கூட்டாண்மை கையகப்படுத்தல்கள் போன்றவற்றில் நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில் தமது சட்டக் கல்வியை கௌரவ மட்டத்தில் பூர்த்தி செய்துள்ளதுடன் இலங்கை சட்டக் கல்லூரியில் முதற்தர கௌரவப் பட்டத்தைப் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து 1994 ஆம் ஆண்டில் இலங்கை உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக நியமனம் பெற்றார். கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை சட்டக் கல்லூரி ஆகியவற்றில் வருகை விரிவுரையாளராக ஆதமலி செயலாற்றியுள்ளார். பட்டய சந்தைப்படுத்தல் கல்வியகத்திடமிருந்து (CIM UK) பட்டப்பின்படிப்பு, சந்தைப்படுத்தல் டிப்ளோமா பட்டத்தை இவர் கொண்டுள்ளதுடன் CIM மற்றும் CIMA ஆகியவற்றின் முன்னணி விரிவுரையாளராகவும் திகழ்கின்றார். இவரின் பரந்தளவு சட்டம் சார்ந்த அனுபவம் காரணமாகரூபவ் பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிப்பாளராக பதவி வகித்திருந்தார். இதில் டேவிட் பீரிஸ் குரூவ் போகல கிரபைட் லங்கா பி.எல்.சிரூபவ் அசட்லைன் லீசிங் கம்பனி லிமிடெட் மற்றும் சின்வா ஹோல்டிங்ஸ் லிமிடெட் ஆகியன அடங்குகின்றன. நாடகம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றுக்கு ஆதமலி வழங்கியுள்ள பங்களிப்புக்காக தேசிய வுழுலுP விருதையும் இவர் பெற்றுள்ளார். வங்கியியல் துறையில்ரூபவ் குறிப்பாக இஸ்லாமிய வங்கியியலில் 20 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய

அனுபவத்தைக் கொண்டுள்ள சட்ட தகைமை பெற்ற ஒரு சட்டத்தரணியாக போல் மேர்சர் திகழ்கின்றார். கூட்டாண்மை ஆளுகையில் பரந்த அனுபவத்தை போல் மேர்சர் கொண்டுள்ளதுடன் இந்த அனுபவங்களைக் கொண்டு குவைட் ஃபினான்ஸ் ஹவுஸ் குரூப் அடங்கலாக பல்வேறு பணிப்பாளர் சபைகளில் பணிப்பாளராக பணியாற்றியுள்ளார். பஹ்ரெய்ன் இன்வெஸ்ட்மன்ட் வங்கி இப்தர் வங்கி ஆகியவற்றின் தவிசாளரும் பணிப்பாளர் சபையின் தவிசாளராகவும் திகழ்ந்தார். நுடயக வங்கி கெப்பிட்டல் மனேஜ்மன்ட் ஹவுஸ் மற்றும் ஊயிiஎநளவ ஆகிய மூன்று நிறுவனங்களையும் ஒன்றிணைத்த செயற்பாடுகளை இவர் மேற்பார்வை செய்திருந்தார்.

பஹ்ரெய்ன் சவுதி அரேபியா மற்றும் குவைட் ஆகிய நாடுகளில் இஸ்லாமிய வங்கிச் சேவைகள் தொடர்பில் போல் அதிகளவு செயலாற்றியிருந்ததுடன் மூலதன மற்றும் ஆளுகை தேவைப்பாடுகளை நடைமுறைப்படுத்தலிலும் ஈடுபட்டிருந்தார். சட்டத்தரணியாக இயங்குவதுடன் குவைட் ஃபினான்ஸ்ள ஹவுஸ் (பஹ்ரெய்ன்) உள்ளக சட்ட ஆலோசகராகவும் பணியாற்றினார். இஸ்லாமிய நிதியியல் தொடர்பாக எழும் பரந்தளவு சட்டச் சிக்கல்களுக்கு போல் மேர்சர் ஆலோசகராக பணியாற்றியிருந்தார். இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றுவது தொடர்பில் கொடுக்கல் வாங்கல்களை ஆவணப்படுத்தலை தயார்ப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளவர். மத்தியஸ்தர் பட்டய கல்வியகத்தின் அங்கத்தவராக போல் மேர்சர் திகழ்வதுடன் மத்தியஸ்தர்களுக்கான வேலைமுறைப் பட்டியலுக்கான GCC வணிக மத்தியஸ்த நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மத்தியஸ்தராகவும் திகழ்கின்றார்.

அமானா வங்கியின் பணிப்பாளர் சபையில் புதிய நியமனங்களைத் தொடர்ந்து பணிப்பாளர் சபையில் அங்கம் வகிப்போர் அலி அஸ்கர் (அஸ்கி) அக்பரலி (தலைவர்) ரஜீவ் நந்தலால் திவேதிரூபவ் பிரதீப் தில்ஷான் ரஜீவ ஹெட்டியாரச்சி ஆரன் ரஸல் டேவிஸன் மொஹமட் அதாவுர் ரஹ்மான் சவுத்ரி சயித் முஹம்மத் அஸிம் ராசா கைருல் முஸமெல் பெரேரா பின் அப்துல்லா திஷான் ஹரேந்திரநாத் சுபசிங்க ஒமர் காசிம் மொஹமட் ஆதமலி மற்றும் போல் மேர்சர் ஆகியோர் அடங்கியுள்ளனர். ஓய்வு பெற்ற பணிப்பாளர்களான ஒஸ்மான் காசிம் தயீப் அக்பரலி ஹர்ஷ அமரசேகர மற்றும் ஜஸ்ரி மக்தொன் இஸ்மைல் ஆகியோர் வங்கியின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமான ‘OrphanCare’ நிதியத்தின் காப்பாளர்களாகத் திகழ்வார்கள்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதியுடன் இயங்கும் அமானா வங்கி கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ளதுடன் ஜெத்தாவை மையமாகக் கொண்டியங்கும் குரூப் வசம் 29.97 சதவீத பங்குகள் காணப்படுகின்றன. IsDB குரூப் என்பது ‘AAA’ (S&P, Moody’s Fitch) தரப்படுத்தலைப் பெற்ற பல்துறை அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன் 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. 2020 ஜுன் மாதத்தில் ஃபிட்ச் ரேட்டிங் லங்காவினால் அமானா வங்கியின் நீண்ட கால தரப்படுத்தல் BB+(lka) எனும் நிலைக்கு தரமுயர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்களையோ கொண்டிருப்பதில்லை. அதன் பிரத்தியேகமான சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமான ஆதரவற்றோர் பராமரிப்பு நம்பிக்கை நிதியை ‘OrphanCare’ Trust ஐ மாத்திரமே பேணி வருகின்றது.