Take a fresh look at your lifestyle.

ஓய்வூதியம் பெறும் உங்களின் சேவையை பாராட்டி அமானா வங்கியின் ‘நன்றிக்கடன் ‘

34

மனிதாபிமானத்தை முதன்மையாக கொண்ட அமானா வங்கி அரச துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்களுக்காக ´நன்றிக்கடன்´ சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இச் சேவையின் ஊடாக பிணையாளிகள் எவரும் இன்றி ரூ 50 இலட்சம் (5 000 000) வரை நிதி வசதியை சுமார் 10 வருடம் வரை கவர்ச்சியான தவணை முறையில் வழங்குகின்றது. இந்த நிதி வசதியை 24 மணி நேரத்திற்குள் வழங்குவதற்கான பிரத்தியேக ஏற்பாடுகளை அமானா வங்கி மேற்கொண்டுள்ளது.

இது மாத்திரமன்றி வாடிக்கையாளர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் இலவச Debit அட்டை அமானா வாங்கி ATM இயந்திரம் ஊடாக இலவசமாக மற்றும் ஏனைய வங்கி ATM இயந்திரங்களின் ஊடாக கழிவுடனான மீளப்பெறும் வசதி. மேலும் நன்றிக்கடன் சேவையின் ஊடாக திறக்கப்படும் ஓய்வூதிய கணக்கிற்கு விசேட இலாப பகிர்வு விகிதமும் வழங்கப்படுகின்றது.

இந்தச் சலுகை தொடர்பாக நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் உப தலைவர் சித்தீக் அக்பர் கருத்துத் தெரிவிக்கையில், ´ஓய்வூதியம் பெறுவோருக்கு நன்றிக்கடன் தெரிவிக்கும் வகையில் இந்த வசதியை நாங்கள் விசேடமாக வடிவமைத்துள்ளோம். தமது ஓய்வு காலப்பகுதியில் எழும் நிதித் தேவைகளை நிம்மதியாக நிவர்த்தி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும் அதேவேளையில் எவரிலும் தங்கியிருக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தாது சௌகரியத்தையும் பெற்றுக் கொடுக்கும் என்று நம்புகின்றோம்;.´ என்றார்.

வாடிக்கையாளர்கள் மேலதிக தகவல்களுக்கு 011 7 756 756 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவோ, அருகிலுள்ள கிளைக்கு நாடவோ அல்லது www.amanabank.lk எனும் இணையத்தளத்தில் உள்ள விபரங்களை பார்வையிட முடியும்.

இலங்கை மத்திய வங்கியினால் உரிமம் அளிக்கப்பட்ட அமானா வங்கி பி.எல்.சி.; கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட ஒரு தனி நிறுவனமாகும். ஜித்தாவில் தலைமையகத்தைக் கொண்ட இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி (IsDB) குழுமம் பிரதான பங்குதாரர் என்ற முறையில் அமானா வங்கியில் 29.97% பங்குளைக் கொண்டுள்ளது. IsDB குழுமம் ‘AAA’ தரப்படுத்தலைப் பெற்ற (S&P, Moody’s & Fitch) பல்துறை அபிவிருத்தி சார்ந்த நிதி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் 57 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. அமானா வங்கி ஒரு தனி நிறுவனமாகும். ‘OrphanCare’ Trust அமைப்பைத் தவிர அதனைப் பிரதிநிதித்துவம் செய்யும் உப நிறுவனங்கள் துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்கள் எதுவும் கிடையாது.