Take a fresh look at your lifestyle.

அநுராதபுரத்திலும் யாழ்ப்பாணத்திலும் பெரிய அளவிலான சூரியசக்தி திட்டங்களில் முதலீடு செய்துள்ள செலிங்கோ லைஃப்

29

அநுராதபுரத்திலும் யாழ்ப்பாணத்திலும் செலிங்கோ லைஃப் பெரிய அளவிலாள சூரிய சக்தி திட்டங்களில் முதலீடுகளைத் தொடங்கி உள்ளது. அந்த நகரங்களில் அமைந்துள்ள மிகப் பெரிய சூரிய சக்தி திட்டங்களாக இவை அமையும் என்று நம்பப்படுகின்றது. இவற்றின் மூலமான வருடாந்தம் மின்வலு உற்பத்தி 120 மெகாவோட் சக்தியாக இருப்பதோடு கம்பனியால் ஏற்படும் காபன் பதிவை 42.6 தொன்களால் இது குறைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரத்தில் அமையவுள்ள திட்டத்தின் கொள்ளளவு 50Kw ஆற்றல் கொண்டதாக இருக்கும். வருடாந்தம் 66 மெகாவோட்ஸ் மின் உற்பத்தியை இதன் மூலம் மேற்கொள்ள முடியும் என எதிர்ப்பார்க்கப் படுகின்றது. செலிங்கோ லைஃப்பின் இரண்டாவது பெரிய சூரிய சக்தி திட்டமான இதுரூபவ் வருடாந்தம் 66000 அலகு பிரதான பிரிவு மின்சாரத்தை சேமிக்கும். அதேபோல் தேசிய மின்பாவனை மூலம் வெளியாகும் வருடாந்த காபன் வெளியேற்றத்தை 23.4 தொன்களால் குறைக்கவும் இது உதவியாக இருக்கும். யாழ்ப்பாணத்தில் 40Kw ஆற்றல் கொண்ட முறைமை மூலம் வருடாந்தம் 54 மெகாவோட்ஸ் உற்பத்தி செய்யப்படும். இது 54000 தேசிய மின் அலகுகளை சேமிப்பதோடு வருடாந்தம் 19.2 தொன் காபன் வெளியேற்றத்தையும் கட்டுப்படுத்தும். இது செலிங்கோ லைஃப்பின் ஐந்தாவது பெரிய சூரிய சக்தி திட்டமாக அமையும்.

இவற்றுக்கான மொத்த முதலீடு 15.9 மில்லியன்களாகும். 2016ல் தொடங்கப்பட்ட செலிங்கோ லைப்பின் புதிய பிரதான தலைமையகம் 63.18Kw சூரியசக்தி ஆற்றலுடன் தொடங்கப்பட்டது. இதுவே கம்பனியின் மிகப் பெரிய சூரிய சக்தி திட்டமாகும். இது மாதாந்தம் 7200 மின் தேசிய அலகுகளை சேமிக்கின்றது. அத்தோடு கம்பனியின் 108 தொன் காபன் வெளியேற்றத்தையும் அது குறைக்கின்றது.

விரிவான நிலைபேறு தன்மைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் செலிங்கோ லைஃப் தனக்கே சொந்தமான காணிகளில் பசுமைக் கிளை கட்டிடங்களை உருவாக்கும் செயற்பாடுகளையும் தொடர்ந்து வருகின்றது. இந்தப் புதிய கட்டிடங்கள் சூரிய சக்தி ஆற்றல் கொண்டவை. மழைநீர் சேமிப்புத் திட்டமும் கழிவு நீர் மீள் சுழற்சி முகாமைத்துவ முறையும் அவற்றில் உள்ளன. இது குழாய் மூல நீர் விநியோகப் பாவனையைக் கணிசமாகக் குறைக்கின்றது. அத்தோடு இந்தக் கட்டிடங்கள் இயற்கை வெளிச்சத்தில் முடியுமானவரை செயற்படத் தக்கதாகவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ற நவீன ஒளியமைப்பு முறை மற்றும் முறைகள் என்பனவும் சேர்க்கப்பட்டுள்ளன.

புத்தளம் பிரதேசத்தில் களனிப் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்போடு வன திணைக்களத்துக்கு சொந்தமான 50 ஹெக்டெயர் வனப் பிரதேசத்தை செப்பனிட்டு மீளக் கட்டி எழுப்பும் பணியிலும் கம்பனி ரூடவ்டுபட்டுள்ளது. காபன் வெளியேற்றத்தை முற்றாகத் தவிர்ப்பதிலும் சுற்றாடல் பாதுகாப்பிலும் தனது அர்ப்பணத்தின் ஒரு பங்காக இந்தத் திட்டத்தில் கம்பனி ரூடவ்டுபட்டுள்ளது.

செலிங்கோ லைஃப்பின் பசுமைக் கிளை இவ்வாண்டு ஆரம்பத்தில் ஏற்பாடு செய்த ரூடவ் கழிவு சேகரித்தல் நாள் சுற்றாடலில் 11123 இறாத்தல் காபன் கழிவுகள் கலப்பதைத் தடுக்கும் வகையில் அமைந்தது. இது அளவில் 369 மரங்களை பாதகாப்பதற்கு அல்லது 12990 பிளாஸ்டிக் போத்தல்களை மீள் சுழற்சி செய்வதற்கு சமமானதாகும்.