Take a fresh look at your lifestyle.

செலான் வங்கியின் புதிய ஆஃப்-சைட் ATM இயந்திரம் இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில்

101

செலான் வங்கி, தங்கள் வாடிக்கையாளர்களின் நிதித் தேவைகளுக்கு ஆதரவளிக்கும் தங்கள் உறுதிப்பாட்டைத் தொடர்கின்ற வகையில், தனது புதிய ஆஃப்-சைட் ATM இயந்திரத்தை பாதுக்கையில் அமைந்துள்ள இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழக (SLTC) வளாகத்தில் சமீபத்தில் திறந்து வைத்ததாக அறிவித்தது.

புதிய ATM இயந்திரம் ஆகஸ்ட் 14ஆம் திகதி, செலான் வங்கியின் சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர், திரு. ரமேஷ் ஜயசேகரவினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. நிறுவிக்கப்பட்ட ATM இயந்திரம் SLTCயில் கல்வி கட்கும் மாணவர்களுக்கு வசதியாக அமையும், ஏனெனில் எந்த நேரத்திலும் பணத்தை திரும்பப் பெற விரும்புவோருக்கு எளிதான அணுகுதலை உறுதி செய்யும். இந்த விரிவாக்கம் செலான் வங்கியால் திறக்கப்படும் 216 வது ATM இயந்திரத்தை குறிக்கும். மேலும் நாடு முழுவதும் அவர்களின் ATM வலையமைப்பை மேலும் வலுப்படுத்தி வாடிக்கையாளர்களின் வசதியை அதிகரிக்கிறது.

அன்புடன் அரவணைக்கும் வங்கி, செலான் வங்கி, அதிநவீன தொழில்நுட்பம், புதுமையான தயாரிப்புகள் மற்றும் சிறந்த தரமான சேவை ஆகியவற்றின் மூலம் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு உன்னத அனுபவத்தை வழங்குவதற்கான தொலைநோக்குடன் செயல்படுகிறது. சிறிய மற்றும் நடுத்தர, சில்லறை மற்றும் நிறுவனங்கள் என வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வங்கி 172 கிளைகள் மற்றும் நாடு முழுவதும் பரந்துள்ள 216 ATM களைக் கொண்ட வலையமைப்புடன் அதன் கால்தடத்தை விரிவுபடுத்தியுள்ளது.

தயாரிப்புகள் மற்றும் சேவைகள் குறித்த கூடுதல் தகவலுக்கு, https://www.seylan.lk/ ஐ அணுகவும்.