Take a fresh look at your lifestyle.

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு பிரத்தியேகமான கிரடிட் கார்ட்டை அறிமுகம் செய்துள்ள கொமர்ஷல் வங்கி

34

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் (SMEs) மீதான தனது அர்ப்பணத்துக்கு நவீன சான்றாக கொமர்ஷல் வங்கி அந்தப் பிரிவினருக்கென பிரத்தியேகமான கிரடிட் கார்ட்டை அறிமுகம் செய்துள்ளது.

இலங்கையில் SMEs பிரிவினருக்கு மிகப் பெரிய அளவிலான கடன் வழங்கும் வங்கி என்ற வகையில் மாஸ்டர் கார்ட் முத்திரையின் கீழான கிரடிட் கார்ட்டுகளை இந்தப் பிரிவினருக்கு வங்கி வழங்கும். இலங்கை மத்திய வங்கியால் SME என வகைப்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இந்த விஷேட கார்ட்டுகள் வழங்கப்படும்.

இந்தப் பிரிவின் கீழ் வங்கியின் Biz club உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு ‘ComBank Biz Club SME Credit Card’ என்ற பெயரிலும் ஏனைய SMEs பிரிவினருக்கு ‘ComBank Business SME Credit Card,’ என்ற பெயரிலும் இந்த கிரடிட் கார்ட்கள் வழங்கப்படவுள்ளன என்று வங்கி அறிவித்துள்ளது.

இந்த கார்ட் வைத்திருப்பவர்களுக்கு இது மேலதிக நன்மைகள் பலவற்றை கொண்டு வரும். இணைவுக் கட்டணம் நீக்கப்படும். கொமர்ஷல் வங்கியின் நடமாடும் வங்கிச் சேவையோடு இலவச இணைவு (USSD and SMS) வங்கியின் இணையவழி மேடையுடன் இணைந்து கொள்வதற்கான இலவச பதிவு அத்தோடு முதலாண்டு பாவனைக்கான வருடாந்தக் கட்டணம் நீக்கம் வங்கியின் பாரிய அளவிலான கொடுப்பனவு மேடையான பேமாஸ்டரில் இலவச பதிவு முதல் மாத பாவனைக்கான கட்டணம் நீக்கம் வெளிநாட்டுப் பயணங்களின் போது பயணக் காப்புறுதி என்பன இந்த மேலதிக சலுகைகளில் அடங்கும்.

கொமர்ஷல் வங்கியின் SME பிரிவு கிரடிட் கார்ட்கள் மாஸ்டர் கார்ட் அனுசரணையுடன் கூடிய பிரத்தியேகமான அந்த வகைப்படுத்தலுக்கு மட்டுமே உரிய சர்வதேச மற்றும் உள்ளுர் சலுகைகளுக்கும் உரித்துடையதாகும். அத்தோடு இந்த கார்ட் வழியாக செலவழிக்கப்படும் ஒவ்வொரு 400 ரூபாவுக்கும் அதி உயர் மெக்ஸ் லோயல்டி புள்ளிகளையும் சம்பாதித்துக் கொள்ள முடியும் என வங்கி அறிவித்துள்ளது.

கொமர்ஷல் வங்கி SME பிரிவினருக்கு வழங்கும் மேலதிகப் பெறுமானங்களில் 2017ல் ஸ்தாபிக்கப்பட்ட வங்கியின் Biz Club ம் ஒன்றாகும். SME பிரிவினருக்கு விரிவான வலைபின்னல் சந்தர்ப்பங்களை வழங்கி கடன் வழங்குவதற்கு அப்பாலும் அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி விஷேட வங்கிச் சலுகைகள் உற்பட பிரத்தியேக Biz Club டெபிட் கார்ட்டுகளையும் வழங்கி உள்ளது. அத்தோடு இவர்களுக்கு புதிய பொருளாதார தரவுகள் வர்த்தக அபிவிருத்திகள் என்பன பற்றி குறுஞ் செய்தி வழியாகவும் மின் அஞ்சல் வழியாகவும் தகவல்கள் அனுப்பப்படுகின்றன. இணையவழி வங்கிச் சேவை வசதிகளும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு Biz Club உறுப்பினர்களுக்கு மேலதிகமாக நிதி ஆலோசனைச் சேவைகளும் வழங்கப்படுகின்றன. அவர்களது வர்த்தகங்களை விருத்தி செய்து கொள்ள வழிவகுக்கும் பிரத்தியேகமான வர்த்தக கருத்தரங்குகளுக்கு அழைப்பிதழ்களும் அனுப்பப்படுகின்றன.

கொமர்ஷல் வங்கியின் கடனட்டைகளுக்கான ஞசு கொடுப்பனவுகள்ரூபவ் ஏனைய LANKAQR உறுப்பு நிறுவனங்களான இலங்கை வங்கி கார்கில்ஸ் வங்கி DFCC வங்கி LOLC நிதி நிறுவனம் தேசிய சேமிப்பு வங்கி சம்பத் வங்கி நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி உள்ளிட்டவற்றின் QR கொடுப்பனவுச் செயலிகள் மூலமாகவும் மேற்கொள்ளப்பட முடியும்.

உலகின் ஆயிரம் தலைசிறந்த வங்கிகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி தொடர்ந்து பத்து வருடங்களாக அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இவ்வாண்டு வங்கி அதன் 100 வது அண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. 2019 ல் 50 க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் விருதுகளை வென்றுள்ள கொமர்ஷல் வங்கி இலங்கையில் 268 கிளைகளுடனும் 873 ATM வலையமைப்புடனும் செயற்படுகின்றது.

கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டதாகவும் மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் நேய்பியுடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது.