Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசி பலன் – 27-11-2020

21

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் நிதானத்துடன் கையாள்வது நல்லது. ஆரோக்கிய ரீதியாக விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் பொறுமையுடன் சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டைகள் சச்சரவுகள் வந்து மறையும். தொழில் ரீதியான முன்னேற்றம் மந்தநிலை இருக்கும். உணவு கட்டுப்பாடு விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுமானவரை முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் இருக்க சுமாரான பலன்களே உண்டாகும். அதிக நேரத்தை குடும்பத்துடன் செலவிடக் கூடிய வாய்ப்புகள் உண்டு.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத நல்ல நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மந்தநிலை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் விற்பவர்களுக்கு சோர்வு உண்டாக வாய்ப்புகள் உண்டு.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. எதிர்பாராத மாற்றம் மகிழ்ச்சியை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தை தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பதில் சிக்கல் உண்டு.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். இறை வழிபாடு செய்வது நல்லது. தேவையில்லாமல் வெளியில் செல்வதை குறைத்து கொள்வது நல்லது. சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்புகள் உண்டாகும். ஆரோக்கிய ரீதியான விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய வாய்ப்புகள் பலன் தரும் வகையில் இருக்கும். மேலும் தகவல் தொடர்பு விஷயங்களில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்பட சந்தர்ப்பங்கள் உருவாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் இருக்கும் நபரிடம் தேவையற்ற வாக்கு வாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது உத்தமம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலைப்பளு காரணமாக சோர்வு உண்டாகும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து முக்கிய முடிவுகளை எடுக்க நன்மை உண்டாகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் உண்டாக வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பொருளாதார பிரச்சனைகளை திறம்பட சமாளிப்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நிகழ்வுகள் நடைபெறக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. ஆரோக்கிய ரீதியான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிர்பாராத பண வரவு மகிழ்வை தரும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் சிறப்பாக நடைபெறும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். ஆரோக்கியம் தரும் உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்துடன் நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளால் சில தொல்லைகள் வந்து சேரும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தனவரவில் திருப்தி இல்லாமல் இருக்கலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. மந்தநிலை நீடிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி தரும் அமைப்பாக இருப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். உறவினர்களின் அனுசரிப்பு மனதிற்கு தெம்பு அளிக்கும்.