Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசி பலன் – 13-11-2020

52

மேஷம்

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சகோதர வகையில் அனுகூலம் ஏற்படும். சிலர் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

ரிஷபம்

வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு உதவி செய்வார்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்

மனதில் உற்சாகம் பெருகும். தாய் வழி உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகம் இருந்தாலும் சிறப்பாகச் செயல்படுவீர்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டு.

கடகம்

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனச் சஞ்சலம் ஏற்படுத்தும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

சிம்மம்

இன்று நீங்கள் தொடங்கும் காரியங்கள் அனைத்தும் சாதகமாக முடியும். எதிர்பாராத பணவரவும் உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். நீண்டநாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த தகவல் வந்து சேரும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும்.

கன்னி

புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. தாய் வழியில் நன்மைகள் நடக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் அலுவலக பணி சிறப்பாக இருக்கும்.

துலாம்

இன்று உற்சாகமான நாளாக இருக்கும். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்களின் ஒத்துழைப்புடன் எளிதாக முடிப்பீர்கள். புதிய முயற்சி எதுவும் இன்றைக்கு வேண்டாம். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்

உற்சாகமான நாள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். தாயின் உடல்நலன் சிறிய அளவில் பாதிக்கப்பட்டு, மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் நீங்கள் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

தனுசு

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் மூலம் நன்மைகள் ஏற்படும்.

மகரம்

தொடங்கும் முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை காணப்படும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்.

கும்பம்

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். தாயின் உடல்நலம் சீராகும். அலுவலகத்தில் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்கவேண்டிய நிலை ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களிடையே மதிப்பும் ஆதரவும் அதிகரிக்கும். சிலருக்குப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை யோசித்து துவங்குவது நல்லது.

மீனம்

நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணை வழியில் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்பதால் அனுசரித்துச் செல்லவும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.