Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசி பலன் – 12-11-2020

57

மேஷம்

மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்கு மேல் வீண் செலவுகள் உண்டாகும். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வீண்மனஸ்தாபம் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படக்கூடும்.

ரிஷபம்

உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்குமேல் புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். வாகனங்கள் இயற்றும் போது எச்சரிக்கை தேவை. பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்புண்டு. வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுனம்

உற்சாகமான நாள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. அலுவலகத்தில் உங்கள் அனுபவப்பூர்வமான ஆலோசனை பெரிதும் பாராட்டப்படும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாகக் கிடைக்கும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.

 

கடகம்

இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமாக அமையும்.உழைப்பின் அருமையைப் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு சம்பவம் நடைபெறும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்

இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். வழக்கில் தீர்ப்பு சாதகமாகக் கிடைக்கும். வெளியூர்களில் இருந்து சுபச் செய்திகள் வரும். உறவினர்கள்,நண்பர்கள் மூலமாக எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு வாகன யோகம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலர் குலதெய்வ கோயிலுக்கு செல்லக்கூடும்.

கன்னி

இன்று வராது என நீங்கள் நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத்துணை ஆதரவு முழுமையாக கிடைக்கும். சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

துலாம்

புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டு சரியாகும். உறவினர்களுடன் பேசும்போது வீண் மன வருத்தம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப் பிடிக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். எதிர்பாராத பணலாபம் உண்டாகும்.

விருச்சிகம்

அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. வெளிநாட்டில் இருந்து வரும் செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலர் குடும்பத்திற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு

இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். தேவைக்கேற்ப பணம் கையில் இருக்காது. அதனால் பிறர் உதவியை நாடவேண்டி இருக்கும். மற்றவர்களுடன் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

மகரம்

மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். ஒரு சிலருக்கு குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகப் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாகும்.

கும்பம்

காலையில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் உடல் அசதியும் மனதில் சோர்வு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் பணவரவு உண்டாகும். சிலருக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

மீனம்

தொலைதூரத்தில் இருந்து வரும் செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். ஒரு சிலருக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டு.