Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசி பலன் – 10-11-2020

19

மேஷம்

மேஷம் ராசிக்காரர்கள் இன்று அதிகம் வேலைப்பளுவினால் களைத்துப்போவார்கள். பெண்களுக்கு நினைத்தவற்றை வாங்கக்கூடிய யோகமும் உண்டு. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் பெறலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்சுய தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக அமைய இருக்கிறது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இன்றைய நாள் மறைமுக எதிரிகளின் சூழ்ச்சியை முறியடிப்பீர்கள். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிள்ளைகளின் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை புரிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு. சுபகாரிய பேச்சுகள் நன்மையாக முடியும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பல புதிய அனுபவங்களை பெறும் சூழ்நிலை இருக்கும். எதிலும் பெரிய தொகையை ஈடுபடுத்தி செய்வதில் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியம் சீராக இருக்கும். நேர்மையுடன் செயலாற்றும் நினைப்பதால் பல சவால்களை சந்திக்க நேரலாம். தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். பணி செய்கின்ற இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையில்லாத செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் மனக்கசப்புகள் நீங்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெண்களின் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தாங்கள் உண்டு தங்கள் வேலையுண்டு என்று இருப்பது நன்மை பயக்குவதாய் அமையும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் தொந்தரவு சற்று இருக்கத்தான் செய்யும். தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிகளை நிறைவேற்றுவதில் விடாமுயற்சியுடன் செயல்படுவீர்கள். சுப காரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சற்று கால தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எதிர்பார்த்த இடத்தில் இடமாற்றம் சலுகைகள் கிடைத்து சாதகப் பலன்கள் கொடுக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் அனுகூலமான பலன்களை கொடுக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களின் அறிவாற்றல் மிகச் சிறப்பாக செயல்படும் இனிய நாளாக இருக்கும். மிகுந்த உற்ச்சாகத்துடன் செயல்படுவீர்கள். உடலாரோக்கிய விஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். சிலருக்கு பெண்களால் தனலாபங்கள் ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. பொறுமையை கையாளுவதன் மூலம் நல்ல பலன்களை காணலாம். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகள் பலன் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பொறுப்பு, பனிச்சுமை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே மனவருத்தங்கள் நெருக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று குழப்பத்துடன் தொடங்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகளில் வரக்கூடிய சாதக பாதகங்களை நன்றாக சிந்தித்து செயலாற்றுவதே நன்மை பயக்கும். குடும்பத்தில் மூத்தவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். தொழில் ரீதியான பயணங்களில் முன்னெச்சரிக்கை தேவை. தொழில், வியாபாரங்களில் சராசரியான லாபங்களை பெறுவார்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. நாள்முழுவதும் எதிர்வரும் துயரங்கள் யாவையும் தன்னம்பிக்கையுடன் கையாளுவீர்கள். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக செயல்படுவார்கள். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. சுபகாரிய முயற்சிகளில் சற்று தாமதம் ஏற்பட்டு பின்பு நன்மைகள் உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஒரு காரியம் நிறைவேறும். பெண்கள் மூலமாக சிலருக்கு மிகுந்த நன்மைகள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் மீட்டு எடுப்பீர்கள். எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும். உடலாரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணம் சம்பந்தமான விடயங்களில் சற்று கூடுதல் கவனம் தேவை

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய விதிகளை கையாள்வதன் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பிறர் மனதையும் புண்படுத்த நினைக்காத நீங்கள் உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில சங்கடங்களை சந்திக்க நேரலாம். இன்று உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். உங்களுடைய பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். பிரிந்த உறவுகள் ஒன்று சேறும்.