Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசிபலன் 09-11-2020

48

மேஷம்

மேஷ ராசிக்காரர்களது திறமை இன்று முழுமையாக வெளிப்பட போகின்றது. வியாபாரத்தில், அலுவலகத்தில், வீட்டில் எல்லா இடத்திலும் உங்களது பேச்சாற்றல் மூலம் அசத்தலான வேலையை செய்யப் போகிறீர்கள். சொல்லப்போனால் உங்களுக்கு இன்று பாராட்டு மழைதான். புகழ் கிடைத்தவுடன் தலைகனம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இதுநாள் வரை இல்லாத உற்சாகத்தை உங்களுடைய வேலையில் காட்டப் போகிறீர்கள். குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று வந்து மனநிம்மதி அடைவீர்கள். உறவினர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் நிலுவையில் இருந்தால் இன்றைக்கு அந்த வேலையை முடித்துக் கொள்ளலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு முயற்சியில் வெற்றி கிடைக்கும். வராது என்று நினைத்துக்கொண்டிருந்த கடன் தொகை இன்று வசூல் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. முயற்சி செய்து பாருங்கள். வாழ்க்கை துணைக்கு ஆடம்பரமான பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். சந்தோஷமான நாளாக இருக்கும்.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு வேலை சுமை காரணமாக கொஞ்சம் அசதி இருக்கும். சோம்பேறித்தனம் படாமல் உங்களுடைய வேலையெல்லாம் முன்கூட்டியே முடித்து வைத்து விடுங்கள். பெயர் புகழ் எல்லாம் கிடைக்கப் போகின்றது. உழைப்புக்கேற்ற ஊதியத்தை அடைந்து மனநிறைவு பெறுவீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் புதிய முயற்சியை தொடங்குவதாக இருந்தால், காலை நேரத்திலே தொடங்கி விடுங்கள். மதியத்திற்கு மேல் சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கூடுமானவரை முக்கியமான விஷயம் என்றால் நாளை தள்ளிப் போடுவது நல்லது. கஷ்டப்படும் அளவிற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. தினசரி வேலைகள் சுமூகமாகவே செல்லும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உறவினர்களின் மூலமாக உதவி கிடைக்கும். உறவினர்களுடைய முக்கியத்துவத்தை இன்று நீங்கள் புரிந்து கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். அலுவலகத்தில் வேலை ஆட்கள் சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள்.

 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு தாய்வழியில் நன்மைகள் வந்து சேரும். நண்பர்கள் எதிர்பாராத உதவியை, எதிர்பாராத நேரத்தில் செய்து உங்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்க போகிறார்கள். வீட்டில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும் சுபச் செலவுகளும் உண்டு.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக தான் இருக்கப்போகின்றது. வேலை நிமித்தம் காரணமாக வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். பாதுகாப்பு கவசத்தோடு பயணம் செய்ய வேண்டும். ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கு இன்று அனுகூலமான நாள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் உண்டு. அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். உங்களது பொருட்களை மட்டும் கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். திருடு போவதற்கு வாய்ப்பு உள்ளது.

மகரம்

மகர ராசிக்காரர்கள் தங்களுடைய தினசரி வேலையை எப்போதும்போல பார்க்கலாம். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்பாராத பணவரவு கிடைத்தாலும், எதிர்பாராத செலவு கையைக் கடிக்கத்தான் செய்யும். முடிந்தவரை சிக்கனமாக செலவு செய்ய பாருங்கள் கடன் வாங்காதீர்கள்.

கும்பம்

கும்ப ராசிகாரர்களுக்கு தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரப் போகின்றது. உங்களது வாழ்க்கைத் துணையின் மூலம் மனமகிழ்ச்சி அடையும் அளவிற்கு சம்பவங்கள் நடக்கும். அவர்கள் உங்களுக்கு எதிர்பாராமல் பரிசு வாங்கித் தரலாம். சர்ப்ரைஸ் கொடுக்க போறாங்கன்னு வச்சுக்கோங்க. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் எதிலும் பொறுமை காக்க வேண்டியது அவசியம். அவசர அவசரமாக எந்த ஒரு செயலிலும் முடிவு எடுத்து விட்டு பின்பு யோசிக்காதீர்கள். நன்மை நடப்பதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். பதறாத காரியம் சிதறாது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு செயல்பட்டால் நன்மை உண்டு.