Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசி பலன் – 6-11-2020

73

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் மனக்கசப்புகள் நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பரஸ்பர ஒற்றுமையுடன் செயலாற்றுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையில்லாத செலவுகளை குறைத்துக்கொண்டால் முன்னேற்றம் காணலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஒரு காரியம் நிறைவேறும். சுபகாரிய முயற்சிகள் காலதாமதம் ஏற்பட்டாலும் வெற்றியில் முடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் மீட்டு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகள் கால தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எதிர்பார்த்த இடத்தில் இடமாற்றம் சலுகைகள் போன்றவை சாதகப் பலன்கள் கொடுக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் அனுகூலமான பலன்களை கொடுக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்றுவதில் விடாமுயற்சியுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தாங்கள் உண்டு தங்கள் வேலையுண்டு என்று இருப்பது நலம் தரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய அறிவாற்றல் சிறப்பாக செயல்படும் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். அரோகிய வீதியான விஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவை.

கன்னி

கன்னி ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையை கையாளுவதன் மூலம் நல்ல பலன்களை காணலாம். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகள் பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்பு சுமை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு என்று என்னால் அதிகம் சோர்வுடன் காணப்படுவார்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் பெறலாம். பெண்களுக்கு நினைத்தவற்றை வாங்கக்கூடிய யோகமும் உண்டு. சுய தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பத்துடன் காணப்படுகிறார்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகளில் வரக்கூடிய சாதக பாதகங்களை நன்றாக சிந்தித்து செயலாற்றுவதே நன்மை தரும். குடும்பத்தில் மூத்தவர்களின் அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. வாரணா ரீதியான பயணத்தில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். உங்களுடைய பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். யார் மனதையும் புண்படுத்த நினைக்காத நீங்கள் உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில சங்கடங்களை சந்திக்க நேரலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய விதிகளை கையாள்வதன் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்வரும் துயரங்கள் யாவையும் தன்னம்பிக்கையுடன் கையாளுவீர்கள். நண்பர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்த பணிகளை முடிப்பதில் இடையூறுகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களை சுற்றியிருப்பவர்களின் சூழ்ச்சியை முறியடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை புரிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிள்ளைகளின் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுபமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பல புதிய அனுபவங்களை கற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். நேர்மையுடன் செயலாற்றும் நினைக்கும் நீங்கள் பல சவால்களை சந்திக்க நேரலாம். பெரிய தொகையை ஈடுபடுத்தி முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.