Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசி பலன் – 1-11-2020

76

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நடக்க கூடிய நாளாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் வரும் தடைகளை சமாளிக்கக் கூடிய தைரியம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கை வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் ஏமாற்றம் ஏற்படலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்கள் வருகையால் மனம் மகிழும். நண்பர்களின் ஆதரவு எப்போதும் உடனிருக்கும் என்கிற தைரியம் பிறக்கும். சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் ஆலோசனை இல்லாமல் முடிவெடுக்காதீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையான ஓய்வு கிடைக்கும். தொழில் ரீதியான போட்டி பொறாமைகள் குறையும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் உண்டாகக் கூடிய அற்புதமான அமைப்பு. எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியான லாபம் இரட்டிப்பு மகிழ்ச்சி தரும். ஆரோக்கியத்தில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கொடுத்த வேலைகளை முடிப்பதில் கால தாமதம் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். சமூகத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த ஒரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது மிகவும் நல்லது. உங்களுடைய ராசிக்கு கிரக அமைப்புகள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் கூடுமானவரை தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாக வாய்ப்புகள் உண்டு.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத வகையில் திடீர் திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நீங்கள் நினைத்ததை விட உங்களுக்கு சிறப்பாகவே அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல் டென்ஷன் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது.

 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. பொருளாதாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து விடுவீர்கள். தொழில் ரீதியான பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் லாபம் காண்பீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. உங்களை உணர்ச்சிவசப்படக் கூடிய விஷயங்களில் இருந்து சற்று தள்ளியே இருங்கள். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனமுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். கொடுக்கப்பட்ட வேலைகளை பொறுப்பாக செய்து முடித்தால் சிறப்பான முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் ஆதரவு தருவார்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்கள் நல்ல பலன்களைக் கொடுக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாளாக அமையும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்தினால் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் சாதக பலன் கொடுக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாகவே இருக்கும். பொருளாதார ஏற்றம் நன்றாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது மிகவும் நல்லது. தேவையற்ற நபர்களின் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டால் உங்களுக்கும் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்ப விஷயங்களை மூன்றாம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனம் தேவை.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகம் மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். சிறு தொழில் புரிபவர்களுக்கு நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய அற்புதமான அமைப்பு. பெண்களுக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.