Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசி பலன் – 22-10-2020

52

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பலவீனத்தை அறிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அதனை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் இருக்கும் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். இதுவரை அனுபவித்து கொண்டிருந்த கஷ்டங்கள் மாறி படிப்படியாக முன்னேற்றம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. உங்களை சுற்றியுள்ள மனிதர்களை அப்படியே நம்பி விடாதீர்கள். ஊக்கப்படுத்தும் நபர்களை தூக்கி எறியாதீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து உங்கள் வேலையில் கவனம் செலுத்தினால் நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சுய முடிவு நன்மை தரும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்க கூடிய நேரத்தில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். இருப்பினும் இறுதியில் நிச்சயம் வெற்றி உண்டாகும் மனதை தளர விடக்கூடாது. தொழில் போட்டி பொறாமைகள் தன்னம்பிக்கையை இழக்கச் செய்யலாம். விடாமுயற்சியுடன் போராடினால் வெற்றி நிச்சயம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் தலைவலியாக மாறக்கூடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை சரியாக வழி நடத்துவீர்கள். திட்டமிட்டு செலவு செய்யும் உங்கள் ராசிக்கு சுமாரான கிரக அமைப்பாக இருந்தாலும் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் வரக்கூடும். எதிர்காலத்தைப் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களை நீங்களே குழப்பத்துடன் பார்த்துக் கொள்வீர்கள். நாம் செய்வது சரியா தவறா என்கிற குழப்பமான மனநிலை நிலவும். எந்த ஒரு விஷயத்திலும் அவசர முடிவுகளை தவிர்க்கவும். ஒன்றுக்குப் பலமுறை யோசித்து அதன் பின் முடிவெடுப்பது நல்லது. சார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததை சாதிக்க கூடிய நாளாக அமைய இருக்கிறது. சிறு சிறு விஷயங்களுக்கும் உணர்ச்சிவசப்படக் கூடிய நீங்கள் அதிகம் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படலாம்.

 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க கூடிய நாளாக அமைய இருக்கிறது தடைபட்டுக் கொண்டிருந்த சுப விஷயங்கள் முடிவுக்கு வரும். பகை கொண்ட மனிதர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். அதிக இரக்கம் கொண்ட உங்கள் ராசிக்கு சமுதாயத்தில் இருந்து வந்த மரியாதை உயர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக செயல்படுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரக்கூடிய அமைப்பு என்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். அற்புதமான கிரக அமைப்பு இருப்பதால் சுபகாரியங்கள் கைகூடும். பயண ரீதியான விஷயங்களில் மட்டும் சற்று எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள். மனதிற்கு பிடித்தவர்கள் சில தேவையில்லாத பிரச்சனைகளால் மன உளைச்சலை கொடுப்பார்கள். இதுவும் கடந்து போகும் என்ற நிலையை உணர்ந்து நடந்து கொள்வது நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருப்பதால் சொத்து சுகம் போன்ற ஆடம்பர விஷயங்களை சாதகமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்ட முதலீடுகளுக்கு எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க கூடிய அமைப்பாக இருக்கிறது. புதிய வாகனம் வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலன் கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கியத்தில் சிறுசிறு தொந்தரவுகள் ஏற்பட்டு செலவுகள் செய்ய நேரிடும். வீடு மனை போன்ற வாங்கும் முயற்சிகளில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது எவ்வளவு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்தாலும் அவர்களிடம் இருந்து சற்று தள்ளியே இருங்கள். உடனிருப்பவர்களே உங்களை உதாசீனப்படுத்தும் நிலை வரலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறை வழிபாடுகளில் அதிக நாட்டம் கொள்வீர்கள். பயணங்கள் மூலம் வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் கூடுமான வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனுகூல பலன் தரும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நீண்ட நாள் முயற்சிகளுகு அங்கீகாரம் கிடைக்கப் பெறும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு மனமகிழ்ச்சியை தரும்.