Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசி பலன் – 18-9-2020

66

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த முயற்சிகளில் எல்லாம் அனுகூலமான பலன்கள் கிடைக்கப் பெற வாய்ப்புகள் உண்டு. ஒரு சிலர் தங்கள் திறமைக்கேற்ப எதிர்பார்க்கும் அங்கீகாரம் கிடைக்கப் பெறும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் ஒரே சீராக இருந்து வரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் கவனமுடன் செய்வது அவசியமாக இருக்கும். உங்களுடைய மனதில் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்பட இருக்கலாம் என்பதால் எதையும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கணவன் மனைவி இடையேயான உறவு சுமூகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்க பெறும். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் அளிக்க கூடிய நாளாக இருக்கும். நீண்டநாள் உழைப்பிற்கு தகுந்த பலன்கள் கிடைக்கப் பெற வழிவகை உண்டு. கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் நிகழ சந்தர்ப்பங்கள் அமையும். தந்தை வழி உறவினர்கள் மூலம் லாபகரமான பலன்களை பெறலாம். ஆஞ்சநேயரை வணங்கி வர மன அமைதி பிறக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களை உதாசீனப்படுத்தும் நபர்கள் முன் ஜெயித்துக் காட்ட கூடிய வாய்ப்புகள் அமையும். எந்த ஒரு விஷயத்திலும் தீர்க்கமாய் யோசித்து முடிவெடுப்பது நல்லது. தம்பதியருக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். வேலை தேடுபவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமைவதில் தாமத பலன் உண்டாகும். பூர்விக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வளர்ந்து அருமை இனிய நாளாக அமைய இருப்பதால் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்றம் தரும் வகையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் எதிர் பாராத வருகையால் காணப்படும். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். எதிர்பாராத வகையில் திடீர் பண வரவு உண்டாகும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சுமாரான லாபம் தான் ஈட்ட முடியும். புதிய யுத்திகளை கையாளுவதன் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை நிலவும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய வகையில் சிறப்பான அமைப்பு என்பதால் குதுகலத்துடன் இருப்பீர்கள். உங்களின் நீண்டநாள் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கக் கூடிய அற்புதமான நாளாக இருக்கும். உங்களின் குறிக்கோள்கள் மற்றவர்களைப் பாதிக்காத வண்ணம் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அமையும். பேச்சில் நிதானமும் கனிவும் இருப்பது மன அமைதியைத் தரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிதானத்துடன் செயல்பட கூடிய நாளாக அமைய இருக்கிறது. பணம் சார்ந்த விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய பகைவர்களை எதிர் கொள்வதற்கான சூழ்நிலை ஏற்படலாம். நிலுவையில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். ஒரு சிலருக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உருவாகக்கூடும். பல செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதார பிரச்சினையை சரி செய்ய முடியும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றத்தைத் தரும் அமைப்பாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய தொகையை ஈடுபடுத்துவதற்கு முன் ஜாக்கிரதையுடன் செயல்படுவது நல்லது. கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கலாம். உற்றால் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு நினைத்த விஷயங்கள் நினைத்தபடி நிறைவேற கூடிய வாய்ப்புகள் அமையலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான போட்டிகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அமையலாம். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிந்தித்து செயல்படும் நாளாக அமைய இருக்கிறது. எதிலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் தாமதம் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் ஆதாயம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் காணப்படும். குடும்பத்தில் இருக்கும் மூத்த நண்பர் களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்பதெல்லாம் எதிர்பார்த்தபடி நிறைவேறக் கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. நீங்கள் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் நல்லபடியாக நடைபெறும். வாகன வழியில் சிலருக்கு வீண் விரயங்களும் உண்டாகலாம். எதிர்பாராத தனவரவு மன மகிழ்ச்சி புதிய பொருள் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். சுய தொழில் புரிபவர்களுக்கு சிறப்பான லாபம் கிடைக்கும்.