Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசிபலன் 02.09.2021

2

மேஷம்

மேஷம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். வெற்றிக்கு வித்திடும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கடந்த இரண்டு நாட் களாக இருந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி தீரும். செலவுகளை குறைக்க திட்டமிடு வீர்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். மகிழ்ச்சியான நாள்.

மிதுனம்

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்ப தால் தோல்வி மனப்பான்மையால் மன இறுக்கம் அதிகரிக்கும். மற்றவர்களுக்காக நியாயம் கேட்க போய் பெயரை கெடுத்து கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். விட்டு கொடுத்து போக வேண்டிய நாள்.

கடகம்

கடகம்: எதிர்காலம் பற்றிய பயம், டென்ஷன் வந்து செல்லும். பிள்ளைகளின் பிடிவாதத்தை அனுசரணையான பேச்சால் சரி செய்வீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். கவனமாக இருக்க வேண்டிய நாள்.

சிம்மம்

சிம்மம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங் களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

கன்னி

கன்னி: உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்கு வார்கள். விஐபிகள் உதவுவார்கள். வாகன வசதிப் பெருகும். உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர் கள் மதிப்பார்கள். சாதித்து காட்டும் நாள்.

துலாம்

துலாம்: கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சந்திராஷ்டமம் இருப்ப தால் சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள் உடனே உணர்ச்சி வசப்பட்டு கத்தாதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப்போவது நல்லது. வியாபா ரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

தனுசு

தனுசு: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மகரம்

மகரம்: அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார் கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கும்பம்

கும்பம்: உங்களை சுற்றியிருப் பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

மீனம்

மீனம்: திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி முடியும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். வியாபாரத் தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோ கத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.