Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசி பலன் – 14-07-2021

15

மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் இன்றைய நாள் முழுவதும் உஷாராக இருக்க வேண்டும். யாரை நம்பியும் எந்த பொறுப்பையும் ஒப்படைக்க கூடாது. உங்கள் வேலையை நீங்கள் செய்வதுதான் உத்தமம். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமாக சில விஷயங்கள் நடக்கும். வியாபாரம் முன்னேற்றத்தில் செல்லும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்க போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகை இருக்கும். தேவைக்கேற்ப பணம் பல வழிகளில் வந்து பையை நிரப்பும். சந்தோஷத்திற்கு எந்தக் குறையும் வராது.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கப் போகின்றது. உங்களுடைய சுறுசுறுப்பான வேலையை பார்த்து உடன் வேலை செய்பவர்கள் மூக்கின் மேல் விரலை வைக்க போகிறார்கள். அதி புத்திசாலி தனத்தால் வியாபாரத்தில் பெரிய வெற்றியைக் காண்பீர்கள்.

கடகம்:

கடக ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்போடு செயல்பட்டு நாளைக்கு செய்ய வேண்டிய வேலையை கூட, இன்று செய்து வைத்து விடுவீர்கள். இருப்பினும் அவ்வப்போது சின்ன சின்ன சிதறல்கள் குடும்பத்தில் வரத்தான் செய்யும். அனுசரித்துச் சென்றால் பிரச்சனைகள் இல்லை.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் இன்று அமைதியாக இருக்க வேண்டும். கோபம் அதிகமாக வந்தாலும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் முதலாளிகளிடம் எதிர்த்துப் பேச வேண்டாம். அனுசரித்து சென்றால் பிரச்சனைகள் இல்லை.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமான நாளாக இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக பிரச்சனை கொடுத்து வந்த விஷயம் ஒன்று இன்றைக்கு முடிவுக்கு வரும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சுமாரான நாளாகத்தான் இருக்க போகின்றது. வம்பு வழக்குகள் உங்களைத் தேடி வரப் போகின்றது. நீங்கள் சும்மாவே இருந்தாலும் உங்களை சண்டைக்கு வலிக்க யாராவது ஒருவர் வருவார்கள். இதிலிருந்து தப்பிக்க தயாராகிக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றி தரும் நாளாக இருக்கும். சொந்தத் தொழில் தொடங்குவதாக இருந்தால் தொடங்கலாம். புதிய வேலைக்கு முயற்சிக்கலாம். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் மீண்டும் ஆரம்பிப்பது நன்மையைத் தரும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோம்பேறித்தனமாக இருக்கப்போகின்றது. எந்த வேலையைத் தொட்டாலும் அது இழுத்துக் கொண்டே செல்லும். முடிந்தவரை புதிய முயற்சியில் ஈடுபடாதீர்கள். உங்களுடைய வேலையை, முழு கவனத்தோடு தவறில்லாமல் செய்து முடிக்கப் பாருங்கள்.

மகரம்:

மகர ராசிக்காரர்கள் இன்றைய தினம் கோபப்படக்கூடாது. கோபத்தை குறைத்துக் கொண்டு அமைதியாக உங்களுடைய வேலையை செய்யும் பட்சத்தில் பிரச்சினைகள் இல்லை. தேவையில்லாத வம்பு வழக்குகளுக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டால் பிரச்சனைகளில் இருந்து உங்களை காப்பாற்ற யாராலும் முடியாது.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமான நாளாக இருக்கப் போகின்றது. கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். நீங்கள் எதிர்பார்த்த வேலையை எந்த ஒரு தடையுமின்றி செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் சற்று குழப்பமான நாளாக இருக்கும். எந்த முடிவை எடுப்பது எந்த முடிவை எடுக்கக் கூடாது என்ற குழப்பத்தில் தவறான முடிவை எடுக்க வேண்டாம். முடிவை நாளை தள்ளிப் போடுங்கள். உங்களுடைய தினசரி வேலைகளை செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை.