Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசி பலன் – 11-7-2021

19

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்வரும் துயரங்கள் அனைத்தும் தகர்த்து எறியும் வல்லமை பிறக்கும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் உண்டாகும். கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களிடம் இருந்து அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஒன்று நினைத்தது ஒன்று நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எதையும் திட்டம் போட்டு செயல் படுத்துவதில் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தடைப்பட்ட பல விஷயங்கள் தடையில்லாமல் நிறைவேறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. விஷயங்களை கற்றுக்கொள்ள முயற்சி செய்வீர்கள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்களை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபத்தைக் காண்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நெடிய பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆரோக்கியம் சீராகி வரும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் கைகூடி வரும் யோகமுண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களின் போது கவனத்துடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். மனதில் நினைத்தது நடக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் சாதிக்க நினைக்கும் விஷயங்களுக்கு உங்களுடைய குடும்பத்தினரை உதவியாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். பூர்வீக சொத்துக்கள் மூலம் சில தடைகள் ஏற்படலாம் எச்சரிகை தேவை.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நடக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்ப்பதை விட லாபம் அதிகரித்து காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருக்கும் மூத்த நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. அவர்களுடைய அறிவுரை கேட்டு முடிவெடுப்பதும் நல்லது. சுயதொழிலில் எதிர்பார்ப்பதை விட லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைப்பதற்கு உரிய சாதக பலன்கள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் புரிதல் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. நிலுவையிலிருந்த பழைய கடன் பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுமானவரை பொருளாதார முன்னேற்றத்தை தடை செய்யும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் நண்பர்களுடைய ஆதரவு கிடைக்கும். சுய தொழிலில் பெரிய மனிதர்களை சந்திக்க கூடிய யோகம் உண்டாகும். அவர்கள் மூலம் படிப்படியான முன்னேற்றத்தை காண கூடிய தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு வலுவாகும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். உங்களுடைய பேச்சுக்கு சமுதாயத்தில் மதிப்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் அதிக லாபம் கிடைப்பது இடையூறுகள் ஏற்படலாம். கூட்டாளிகளின் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்க கூடுமானவரை விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் செலவிடக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் படிப்படியாக சீராகி வரும். நலிவடைந்த சில விஷயங்கள் மீண்டும் எழுச்சியுறும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை விட அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. நீண்டநாள் நினைவுகளை அசை போட்டுப் பார்க்க கூடிய யோகம் வரும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் உண்டு. உங்களுடைய விடாமுயற்சிக்கு உரிய பலன்கள் கிடைக்கும்.