Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசி பலன் – 29-06-2021

29

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற இடங்களில் செய்யக்கூடிய வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்த முயற்சிகளில் உங்களுக்குதான் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு பணவரத்து இருக்கும். எந்த ஒரு செயலையும் அடுத்தவர்களை நம்பி ஒப்படைப்பதில் கவனம் தேவை. எதையும் யோசிக்காமல் செய்வதை தவிர்க்கவும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான பலன்கள் கிடைக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில மன சங்கடங்கள் ஏற்படலாம். தேவையற்ற மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் அளவிற்கு மேன்மை உண்டாகும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து புதிய முயற்சிகளில் ஈடுபட துவங்குவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு செய்யும் பணி மீது கூடுதல் மரியாதை ஏற்படும். பயபக்தியுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் வந்து செல்லலாம். அதனை ஊதி பெரிதாக்காமல் இருப்பது நல்லது.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய விஷயங்களில் ஈடுபடும் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வரும். பழைய பொருட்களின் மீது கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் எந்த ஒரு செயலையும் யோசிக்காமல் முடிவெடுப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் புரிதல் உண்டாகும். ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது உத்தமம். பணம் இருக்கிறது என்பதற்காக தாம் தூம் என்று செலவு செய்தால் நஷ்டம் ஏற்படும் வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூட்டாளிகளுடன் தேவையற்ற மன சஞ்சலத்தை உருவாக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு ஏற்படலாம். விரக்தியை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது உத்தமம்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் மெத்தனமாக செயல்படக்கூடிய அமைப்பு இருப்பது பாதக பலன்களை கொடுக்கும். எனவே கூடுமானவரை கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களை சுற்றியிருப்பவர்களில் யார் நல்லவர் யார் கெட்டவர் என்பதை உணரும் தருணமாக அமையும். கணவன் மனைவி பிரச்சனைகள் தீரும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணப்புழக்கம் அதிகரிக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை விட அதிக லாபம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு சுபகாரிய பேச்சு வார்த்தைகள் தடையின்றி நடக்கும். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகம் ஆகும். பிள்ளைகளின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீடு மனை போன்றவற்றை வாங்கும் விஷயங்களில் சற்று எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் இதுவரை கண்டிராத வளர்ச்சி விகிதத்தை காண இருக்கிறீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிரிகளிடம் இருந்து வந்த தொல்லை தீர கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன்-மனைவிக்குள் அன்பு பெருகும். புதிய ஒப்பந்தங்களில் எதிர்பார்க்கும் லாபம் காணலாம்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத நன்மைகள் எல்லாம் நடைபெறக்கூடிய இருக்கிறது. தொல்லை கொடுத்து வந்த எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வெளியிடங்களில் பயணம் செல்லும் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. சமூகத்தின் மீதான உங்களுடைய பார்வை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் வெற்றி காண கூடிய அற்புதமான பலன்கள் உண்டு. புதிய முயற்சிகளில் நல்ல பலன் காண்பீர்கள்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் கிடைப்பதால் இடையூறுகள் ஏற்படலாம். எனினும் உங்களுடைய விடா முயற்சியின் மூலம் விஸ்வரூப வெற்றி அடைய கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய சாதுர்யமான நடவடிக்கைகளால் முன்னேற்றத்தை காண இருக்கிறீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவை கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரலாம். ஆரோக்கியம் மேம்படும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பாராத சில தடங்கல்களை சந்திக்க நேரலாம். எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படாமல் நிதானத்துடன் முடிவெடுப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அமையும். தேவையற்ற நண்பர்களின் அறிமுகத்தை தவிர்த்துக் கொள்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணவரத்து சிறப்பாக அமையும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொலை தூர இடங்களிலிருந்து முத்தான செய்திகள் கிடைக்கக்கூடிய அற்புதமான வாய்ப்புகள் உண்டு. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும் வகையில் அமையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகப் பலன்கள் உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.